மதுரை, செப்.27- ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்ட ளை 2006-ஆம் ஆண்டு முதல் 2014- ஆம் ஆண்டு வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அதன் வளாகத்தில் கட்டுமானப் பணி களை மேற்கொள்வதற்கு முன் சுற்றுச் சூழல் அனுமதி கோர வேண்டியதில்லை என்று ஒன்றிய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஈஷா அறக்கட்டளை 1992 இல் நிறு வப்பட்ட தன்னார்வ பதிவு செய்யப்பட்ட பொது தொண்டு அறக்கட்டளை என்று கூறியது. 1994 ஆம் ஆண்டில் கோயம் புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளி யங்கிரி மலையில் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்காக ஈஷா யோகா மையத்தை அமைத்ததாக கூறியது. யோகா, பாரம்பரிய கலைகள் மற்றும் சமஸ்கிருதம் பற்றிய பல்வேறு படிப்புகள் குருகுல வடிவத்தின் மூலம் கற்பிக்கப்பட்டன. அறக்கட்டளை ஐசிஎஸ்இ வாரியத்துடன் இணைக்கப்பட்ட ஆங்கில வழிக் கல்வியையும் வழங்கத் தொடங்கியது. இந்த நிறுவனங்கள் வெள்ளியங்கிரி மலையில் 48.3 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளன.
இந்த நிலையில், 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளை கட்டுமானப் பணிகளை மேற்கொண்டபோது ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிவிப்பு 2006-ன் கீழ் கட்டாய சுற்றுச்சூழல் அனுமதி யைப் பெறத் தவறியதாக தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. மாநில அரசின் நட வடிக்கையை எதிர்த்து ஜக்கி வாசுதேவ் உயர்நீதிமன்றம் சென்றார். தற்போது இந்த வழக்கு கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன், தற்காலிக தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.கிருஷ்ண குமார் ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தபோது, “சுற்றுச்சூழல் அனுமதியில் இருந்து விலக்கு பெற ஈஷா அறக்கட்டளைக்கு தகுதி உள்ளது. கல்வியை ஊக்குவிக்கும் நிறுவனம் என்ற அடிப்படையில் ஈஷா அறக்கட்டளை இத்தகைய விலக்கு கோரலாம் என்று ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது. ஒன்றிய அரசின் 2014-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு திருத்த விதி களின்படி கல்வி நிறுவனங்கள், தொழிற் சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. கல்வியை ஊக்குவிக்கும் நிறு வனம் என்ற அடிப்படையில் விலக்கு கோர லாம் என ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கு விசார ணைக்கு வந்தபோது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஆர்.சுண்முக சுந்தரம், ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், விலக்கு விவ காரம் குறித்து ஒன்றிய அரசு தெளிவு படுத்த வேண்டும் என்று ஏற்கனவே வாதிட்டிருந்தார்.
அப்போது உயர்நீதிமன்றம் “கல்வி நிறுவனங்கள் என்ன சட்டத்திற்கு மேலான வையா? நீங்கள்தான் விதிகளை உரு வாக்குகிறீர்கள், பிறகு நீங்களே விலக்கு அளிக்கிறீர்கள்” என்று உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த நிலையில் நீதிமன்றம் திடீரென தனது முடிவை மாற்றிக்கொண்டதாகத் தெரிகிறது. மேலும், கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்படாவிட்டால், கொடைக் கானல் இண்டர்நேஷனல் பள்ளி, டூன் பள்ளி போன்ற புகழ்பெற்ற நிறுவனங்கள் இருக் காது என்று நீதிபதி டி.ராஜா கூறினார். ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கல்வி கற்க வாய்ப்பே இருந்திருக்காது என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. வழக்கின் விசாரணை புதன்கிழமை தொடர்கிறது. இந்த வழக்கில் ஒன்றிய அரசு சார்பில் ஏஎஸ்ஜி ஆர். சங்கர்நாராயணன், ஈஷா அறக்கட்டளை சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரண் ஆகியோர் ஆஜராகினர்.