states

மியான்மரில் வதைபடும் தொழிலாளர்களை மீட்க வேண்டும்: இரா.முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை,செப்.19- மியான்மருக்கு கடத்தப்பட்ட தொழிலாளர்கள் மீட்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு  இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் இரா.முத்தரசன் கோரிக்கை விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மியான்மாரில் வதைபடும் தமிழகத் தொழிலாளர்களை மீட்க வேண்டும். நாட்டில் நிலவும் வரலாறு காணாத வேலை யின்மை பல விபரீதமான விளைவு களை ஏற்படுத்தி வருகிறது. குடும்ப உறுப்பினர்களின் உயிர் வாழ்வுக்கும், குழந்தைகளின் எதிர்கால நலனுக்கும் வேலை தேடி அலைந்து திரிவோர் அவல நிலை எழுத முடியாத துயரமா கும். இந்தப் பரிதாபகரமான நிலை யைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் சட்டவிரோத செயலில் சில கும்பல்கள் “வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகமைகளாக” செயல்பட்டு வருகின்றன. இதில் பணம் கொடுத்து ஏமாந்து விட்ட, ஆயிரக்கணக்கானோர் சட்டப்படி புகார் கொடுத்துள்ளனர்.

ஆனால், குற்றச் செயல்கள்  குறைந்தபாடில்லை. அண்மை யில் தாய்லாந்தில் வேலை அமர்த்துவதாக கூறி, அழைத்துச் சென்றவர்கள், மியான்மார் நாட் டின் மியாவாடி நகருக்கு கொண்டு சென்று, கொத்தடிமைப் பணிக்கு நிர்பந்தித்து, சித்ரவதை செய்வ தாக சமூக ஊடகங்களில் செய்தி கள் வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி மியாவாடியில் சிக்கியுள்ள வர்கள், தாய்லாந்தில் தவிக்கவிட ப்பட்டவர்கள் குடும்பங்களில் சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தரு வோம் என உறுதியளித்த ஒன்றிய பாஜக அரசு, நடைமுறையில் ஏமாற்றி விட்டதால், தொழிலா ளர்கள் அயல்நாடுகளில் அவதிப் படும் கொடுமை ஏற்பட்டி ருக்கிறது. இந்த நிலையில் மியான் மாரில் சிக்கித் தவிக்கும் தொழிலா ளர்களை மீட்டு, அவரவர் வீடு களில் ஒப்படைத்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க ஒன்றிய அரசும், அயலுறவுத்துறையும் போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாட்டின் பிரதமரையும், அயலுற வுத்துறை அமைச்சரையும் வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

;