விழுப்புரம், ஜூலை 9- விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தைச் சேர்ந்த வர்கள் 14 பேர் கள்ளச் சாராயம் குடித்து கடந்த மே 14-ஆம் தேதி பலியாகினர். கள்ளச்சாராயம் விற்றது தொடர்பாக அமரன், மண்ணாங்கட்டி, ஆறுமுகம், ரவி, முத்து ஆகியோ ரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் ஐந்து பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க சிபிசிஐடி காவல்துறையினர் விழுப்புரம் மாவட்ட ஆட்சிய ருக்கு பரிந்துரை செய்திருந்தனர். இதையடுத்து அவர்கள் ஐந்து பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க ஆட்சியர் சி.பழனி உத்தரவிட்டார். ஆட்சியரின் உத்தரவு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டது.