வாஷிங்டன்,செப்.16- அமெரிக்காவின் வரலாற்றில் முதல் முறையாக இரண்டு மணி நேரத்திற்குள், மூன்று மிகப்பெரிய வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் ஒரே நேரத்தில் தொழிலாளர் போராட்டத்தை நடத்தியுள்ளது ஒருங்கி ணைந்த வாகன உற்பத்தி தொழிலாளர் சங்கம். “எங்களின் போராட்டத்தின் காரணம் நியாயமானது. இது எங்கள் தலை முறை தீர்மானிக்கும் தருணம்” என அந்த சங்கத்தின் தலைவர் ஷான் ஃபைன் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக முறையான ஊதியம், பாது காப்பான பணிச் சூழல், முறையான வேலை நேரம், ஓய்வூதியம் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே உள்ள ஊதியம் உள்ளிட்ட அனைத்து வேறுபாடுக ளுக்கும் தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை தொழிலாளர்கள் முன்வைத்து வந்தனர்.மேலும் தொழிலாளர்களுடன் நிறுவனங்கள் போட்ட ஒப்பந்தம் காலாவதி ஆவதை தொடர்ந்து புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த இந்நிறுவங்கள் முன்வரவில்லை. இதனால் ஜெனரல் மோட்டார்ஸ்,போர்டு,ஸ்டெல்லாண்டிஸ் ஆகிய மிகப் பெரிய மூன்று வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரியும் 1,46,000 தொழிற்சங்க உறுப்பினர்களில் 13,000 பேர் மிச்சிகன், ஓஹியோ மற்றும் மிசோரியில் இருந்த மூன்று ஆலைகளில் ஒவ்வொரு பிரிவுகளில் மட்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். உடன்பாடு எட்டப்படுவது தாமதம் ஆகும் பட்சத்தில் போராட்டத்தில் ஆலைகளின் மற்ற பிரிவு தொழி லாளர்களும் ஈடுபட்டு போராட்டத்தை மேலும் வலுப் படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 1937 ஆண்டில் நடைபெற்ற போராட்டங்கள், எங்கள் தொழிற்சங்கத்தை கட்டியெழுப்ப அடிப்படையாக அமைந்தன. அந்த போர்க் குணமிக்க போராட்ட வரலாற்றை மாதிரியாக வைத்து எங்கள் தலைமுறை செயல்படும் என அவர்கள் கூறினர். 2007 ஆம் ஆண்டு முதல் இந்நிறுவங்கள் பல கோடிகள் லாபம் ஈட்டியும் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் தரவில்லை. 12 சதவீதத்துக்கும் குறைவாகவே, வாகன உற்பத்தி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைத்துள்ளது. தற்போதைய பணவீக்கத்தை கணக்கிட் டால் இந்த மூன்று நிறுவன தொழிலாளர்களும் 15 ஆண்டுக ளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது 1 மணி நேரத்திற்கு 9 டாலருக்கும் குறைவான ஊதியம் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.