states

பாஜகவுக்கு எதிரான விரிவான அணியை கட்டமைக்க நிதிஷ் குமார் தீவிர முயற்சி!

புதுதில்லி, செப்.7- 2024 மக்களவைத் தேர்தலில்  பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சி களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தில்லிக் குப் பயணம் மேற்கொண்டுள்ளார். தில்லி புறப்படுவதற்கு முன்பு, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தேசியத் தலை வர் லாலு பிரசாத்தைச் சந்தித்து ஆலோ சனை நடத்திய அவர், திங்களன்று தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் எச்.டி.  தேவகவுடா ஆகியோரைச் சந்தித்துப்  பேசினார். தொடர்ந்து செவ்வாய்க்கிழ மையன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து. ராஜா ஆகியோரைச் சந்தித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவல கத்தில் யெச்சூரியுடனான சந்திப்புக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், “மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியுடன் எனது தொடர்பு  இளமை காலத்தில் இருந்தே உள்ள தாகும். தில்லிக்கு வரும்போதெல் லாம் மார்க்சிஸ்ட் அலுவலகத்துக்கும் வருவது எனது வாடிக்கை. முன்பு பிரிந்திருந்த நாங்கள் இப்போது மீண்டும் இணைந்துள்ளோம்.

இடது சாரி கட்சிகள், காங்கிரஸ் மற்றும் அனைத்து மாநில கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதே எங்களது முக்கிய நோக்கம்” என்றார். எதிர்க்கட்சிகள் அணியில் காங்கி ரஸ் இடம்பெறுவதில் ஆம் ஆத்மி,  திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கானா  ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளுக்கு கருத்து வேறுபாடு உள்ளதாக கூறப்  படும் நிலையில், அரவிந்த் கெஜ்ரி வாலை அவரது இல்லத்தில் சந்தித்த நிதிஷ் குமார், சுமார் 90 நிமிடங்கள் அவருடன் உரையாடினார். இச்சந்திப்பு குறித்து டுவிட்டரில் பதிவிட்ட கெஜ்ரிவால், “கல்வி, சுகா தாரம், பாஜகவின் ‘ஆபரேஷன் லோட்  டஸ்’ மற்றும் எம்எல்ஏக்கள் பேரம்  உள்ளிட்டவை குறித்து இருவரும் விவா  தித்தோம்’ என்று குறிப்பிட்டிருந்தார். மதச்சார்பற்ற ஜனதா தளம் தலை வர் எச்.டி.குமாரசாமியையும் நிதிஷ் குமார் சந்திக்கத் தவறவில்லை. இதன் தொடர்ச்சியாக புதன்கிழ மையன்று சிபிஐ (எம்எல்) பொதுச்  செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா வை சந்தித்த நிதிஷ்குமார், நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒரு வரும், தேசியவாத காங்கிரஸ் தலை வருமான சரத் பவாரையும் சந்தித்து உரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், ‘சரத்பவாருட னான உரையாடல் நன்றாக இருந்தது. அனைவரும் ஒற்றுமையாக இருப்பது முக்கியம். பெரும்பாலான எதிர்ப்பு கள் அவிழ்க்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டால் அது நாட்டின் நலன் சார்ந்ததாக இருக்கும்’ என்று குறிப் பிட்டார்.

;