திருச்சிராப்பள்ளி,செப்.12- தீக்கதிர் திருச்சி பதிப்பு பொதுமேலாளர் மறைந்த தோழர் எஸ்.பன்னீர்செல்வம் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி ஞாயிறு மாலை திருச்சி வெண்மணி இல்லத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமை வகித்தார். சிபிஎம் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன், மாநகர் மாவட்டச் செயலா ளர் ஆர்.ராஜா, தீக்கதிர் முன்னாள் ஆசிரியர் வி.பரமேஸ்வரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எம்.சின்னதுரை, எஸ்.ஸ்ரீதர், தீக்கதிர் ஆசிரி யர் மதுக்கூர் இராமலிங்கம், தீக்கதிர் முதன்மை பொதுமேலாளர் பாண்டி ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். முன்னதாக மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் தோழர் எஸ்.பன்னீர்செல்வம் படத்தை திறந்து வைத்து அவரது குடும்பத்தின ரிடம் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.2 லட்கத்தை வழங்கினார். நிகழ்வில், தீக்கதிர் பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், மதுரை பதிப்பு பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் திருச்சி பதிப்பு நிர்வாக பொறுப்பாளர் ஜெயபால் நன்றி கூறினார்.