states

பிஎம் ஸ்ரீ பள்ளிகள் பிஞ்சுக்குழந்தைகளின் மனதில் நஞ்சு விதைப்பு!

தேசியக் கல்விக் கொள்கை உலகத் தரம் வாய்ந்த கல்வி என்று  கூறினாலும் இதற்குப் பின்னால் இருப்பது மோடியும், முகேஷ் அம்பானியின் ரிலை யன்ஸ் நிறுவனமும் தான். இந்த கல்விக் கொள்கையில் தன்னு டைய கோரிக்கைகளில் பெரும்பாலா னவை சேர்க்கப்பட்டுள்ளதாக ஆர்எஸ்எஸ் பகிரங்கமாகக் கூறிவந்துள்ளது. அரசின் நிதியுதவியால் மேற்கொள்ளப்படும் இந்  தக் கல்வி முறை பெரும்பாலும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கே பயன்படும். பிரதமரின் அறிவிப்பிற்குப் பிறகு, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பெரிய தொரு முதலீட்டை கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி அறிவித்தார். சந்தைப் படுத்தல் நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில், அடுத்த நான்கு ஆண்டு களில் இணையவழிக் கல்விக்கு 1500 கோடி  டாலர் மதிப்பிலான சந்தை இருக்கும் எனக்  கூறப்பட்டுள்ளது. மோடியைப் பொறுத்த மட்டில் கல்வி வியாபாரப் பொருள் தான்.   கல்விச் சந்தையில் ஆர்எஸ்எஸ் கருத்துக் களையும் சேர்த்து விற்க முயற்சி நடக்கிறது. அதாவது இந்தியாவில் உலகத் தரக்கல்வி  என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் கல்வி திணிக்  கப்படுகிறது.

குறிப்பாக மூன்று வயது முதல் ஆறு  வயதிற்குட்பட்டவர்கள் மனதில் இந்துத் துவா கொள்கைகளை புகுத்துவதற்கு அதா வது கட்டுக்கதைகள், தவறான சிந்தனை கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றை விதைப்பதற்கு இந்தக் கல்வி முறை உத வும். அதாவது ஆர்எஸ்எஸ் உறுப்பினர் களை ஆறு வயது முதல் எட்டு வயதிற்குள் தயார்ப்படுத்துவதுதான் இதன் நோக்கம். இதில் இணையம் ஒரு முக்கிய பங்க ளிப்பை செலுத்துகிறது. பள்ளிக் குழந்தை களை இணையதளத்தை நோக்கி தள்ள வேண்டிய அவசியம் என்ன? ரைசிங் இந்தியாவுக்கான பிரதம மந்திரி  பள்ளிகள் (PM SHRI) என்ற புதிய கல்விக் கொள்கை, ஒன்றிய நிதியுதவியுடன் செயல்  படுத்தப்படுகிறது. இந்தத்  திட்டத்தின் ஒரு  பகுதியாக, இந்தியா முழுவதும் மாநிலங் கள், யூனியன் பிரதேசங்களில் 14,500 பள்ளி கள் “மேம்படுத்தப்படும்” என்று பிரதமர் நரேந்திரமோடி செப். 5-ஆம் தேதி அறிவித்  துள்ளார். இதற்காக பட்ஜெட்டில் ரூ.27,360  கோடி ஒதுக்கப்பட்டுவிட்டது.  இதில் ரூ. 18,128 கோடி ஒன்றிய அரசின்  பங்காகும். 2022-23- 2026-27-ஆம் ஆண்டு களில் திட்டத்தின் முதல் கட்டம் நிறைவடை யும். கேந்திரிய வித்யாலயாக்கள், நவோ தயா பள்ளிகள் உட்பட, ஒன்றிய, மாநில அர சுகளின்  கீழ் செயல்படும் அரசுப்பள்ளியி லும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட உள்ளது.

40 சதவீத செலவு மாநிலங்கள் தலையில்

பிரதம மந்திரி பள்ளிகள் என்பது புதிய  கல்விக் கொள்கையை வலுக்கட்டாயமாக திணிப்பதன் ஒரு பகுதி தான். இந்தத் திட்டம் குறித்து மாநில கல்வியமைச்சர்களுடன் விவாதித்த பிறகு செயல்படுத்தப்படும் என  ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந் திர பிரதான் கூறியிருந்தார்.  இந்த புதிய திட்டம் குறித்துப் பேசியுள்ள  பிரதமர் மோடி, பிஎம்ஸ்ரீ ஆல் உருவாக்கப் பட்ட அமைப்புகள் “மாதிரிப் பள்ளிகளாக” மாறும். புதிய கலவித்திட்டத்தின் முழு  சாரத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும்  எனக் கூறியுள்ளார்.  மேலும் தேசியக் கல்விக் கொள்கை கல்வியின் தோற்றத்தை மாற்றி யுள்ளது. இந்தத் தருணத்தில் பிஎம்ஸ்ரீ பள்ளி கள் இந்தியா முழுவதும் உள்ள ஆயிரக்க ணக்கான குழந்தைகளுக்கு நல்ல பலனை  அளிக்கும் என நம்புவதாகவும் கூறியுள்ளார். பிஎம்ஸ்ரீ திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்  படும் பள்ளிகளில்  மாணவர்கள் கல்வி கற்ப தற்கு ஏதுவாக பள்ளிகள் அதிநவீனமாக மாற்றப்படும். கண்டுபிடிப்பு சார்ந்த கல் விக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதி நவீன தொழில்நுட்பம், ஆய்வகங்கள், நவீன வகுப்பறைகள், நூலகங்கள், விளை யாட்டுப் பொருட்கள் மற்றும் ஸ்டூடியோக் கள் அமைக்கப்படும். குப்பைகளை மறு சுழற்சி செய்தல், நீர் சேமிப்பு ஆகியவையும் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட பள்ளி களின் பட்டியல், ஒன்றிய அரசால் இன்னும்  வெளியிடப்படவில்லை. பிஎம்ஸ்ரீ  பள்ளிக்கு  ஒன்றிய அரசு நிதியுதவி அளிப்பதால் மொத்  தச் செலவில் 60 சதவீதத்தை ஒன்றிய அர சும், 40 சதவீத செலவு வலுக்கட்டாயமாக மாநிலங்கள் மீதும் திணிக்கப்படும். இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு - காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநி லங்களில், ஒன்றிய அரசு 90 சதவீதம் செலவழிக்கும்.
 

;