சென்னை,ஜூலை 18- சட்டவிரோதமாக விற்கப்பட்ட கோவில் சொத்துக்கள் குறித்து விசா ரணை நடத்தி ஆவணங்களை சேகரித்து மீட்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது சொத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை யுடன் குமார் என்பவர் உயர் நீதிமன்றத் தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிர மணியன் விசாரித்தார். இந்த விசாரணையின்போது குறிப் பிட்ட நிலம் என்பது நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்த மான நிலம் என்பதால் அதற்கு பட்டா வழங்க முடியாது என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக் கப்பட்டது. அதன்பின்னர் மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அறநிலையத்துறை சார்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதா வது கோவில் நிலத்தை அபகரிக்கக் கூடிய நோக்கில் இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில் நிலங்கள், அறநிலையத்துறைக்கு தெரியாமல் அறங்காவலர்கள் சட்டவிரோதமாக மூன்றாம் நபர்களுக்கு விற்கப்பட் டுள்ளதாகவும், இது சம்பந்தமாக அறநிலையத்துறை விசாரணை நடத்தி ஆவணங்களை சேகரித்து இந்த நிலங்களை தானம் அளித்தவர்க ளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கக்கூடிய வகையில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பேராசை பிடித்த சில ருடைய இந்த மோசடியான நிலங்களை வாங்கி அவர்கள் பாதிக்கப்படு கிறார்கள் என்ற போதிலும் அவர்க ளுக்கு எந்த கருணையும் காட்ட முடி யாது என்று கூறி இந்த வழக்கை தள்ளு படி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.