states

தீக்கதிர் விரைவு செய்திகள்

அரசிடம் அரிசி, கோதுமை போதிய அளவு உள்ளது!

புதுதில்லி, அக்.18- ஏழைகளுக்கான இல வச உணவு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்  திட்டங்களுக்குத் தேவைப்  படும் உணவு தானியங்கள் போதிய அளவில் கை யிருப்பில் உள்ளதாக ஒன் றிய அரசு தெரிவித்துள்ளது.

வெள்ளப் பாதிப்பு தடுப்பு பணிகள்

சென்னை-செங்கல்பட்டு மாவட்டத் திற்கு வெள்ள பாதிப்பு பகுதிகளில் தடுப்பு  பணிகளை மேற்கொள்ள ரூ.134.22 கோடியை அரசு அனுமதித்துள்ளது. 28  சிறப்பு பள்ளிகளை நிறுவுவதற்கு ரூ.169.40 கோடிக்கு இந்த அரசு நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது. திருமழிசை அருகே உள்ள குத்தம்பாக்கம் பகுதி யில் புதிய புறநகர் பேருந்து  நிலையம் கட்டுவதற்கு ரூ.168 கோடியை அரசு  அனுமதித்துள்ளது. அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு  வழங்கும் திட்டத் திற்கு ரூ.33.56 கோடியை  அரசு அனுமதித்து உள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

இபிஎஸ் அணி நாடகம்:  துரைமுருகன்  கடும் தாக்கு

சென்னை, அக்.18- தமிழ்நாடு சட்டப்பேரவையில் இபிஎஸ் தரப்பு அதிமுக அணியினர் நாடகம் ஆடுவதாக அவை முன்னவர் துரைமுருகன் குற்றம்சாட்டினார். பேரவையில் செவ்வாயன்று  (அக். 18)  எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை  விவகாரம் தொடர்பாக அதிமுக எடப்பாடி  அணியினர் முழக்கங்களை எழுப்பினர். இதனால் பேரவையில் பெரும் அமளி  ஏற்பட்டது. அப்போது பேசிய அவை முன்னவர் துரைமுருகன், “நீதிபதி ஆறு முகசாமி ஆணையத்தின் அறிக்கையும், அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை யும் பேரவையில் தாக்கல் செய்யப்பட வுள்ளது. இந்த அறிக்கைகளை தாக்கல் செய் தால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வுக்கு இவர்கள் செய்த அநீதிகள், இவை யெல்லாம் வெளியே வரும். எனவே அதற்கு பதில் சொல்ல முடியாது என்றும்  காக்கை குருவிகளை சுடுவதுபோன்று காட்டுமிராண்டித் தனத்தை அரங்கேற் றிய தூத்துக்குடி சம்பவத்திற்கும் பதில்  சொல்ல முடியாது என்கிற பயத்தின் காரணமாக இந்த நாடகத்தை ஆடுகின்ற னர்” என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு மட்டுமே அங்கீகாரம்: மு.அப்பாவு  

சென்னை,அக்.18- சட்டப்பேரவை விதிகள்படி எதிர்க் கட்சி தலைவர் பதவிக்கு மட்டுமே அங்கீகாரம் உண்டு. எதிர்க்  கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு  அங்கீகாரமே கிடையாது என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறினார். மரபுப்படி எதிர்க் கட்சி துணைத்  தலைவர் உள்ளிட்ட சில பதவிக ளுக்கு இருக்கை ஒதுக்கப்படுகி றது. அதிலும் பேரவைத் தலை வருக்கு மட்டுமே அதற்கான உரிமை  உள்ளது. அதில் வேறு யாரும் தலை யிட உரிமையில்லை என்று அவர் கூறினார். இந்த விவகாரத்தில் தன்னிடம்  விளக்கம் கேட்காமல் எந்த முடிவும்  எடுக்கக்கூடாது என்று ஓ.பன்னீர் செல்வமும் கடிதம் கொடுத்திருக் கிறார். அதுமட்டுமல்ல, தேர்தல்  ஆணையத்தில் இன்னமும் ஒருங் கிணைப்பாளராக அவர்தான்  நீடிக்கிறார். நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று  இல்லாமல் சட்டப்பேரவை விதி முறைகள் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்பாவு பேரவையில் தெரிவித்தார்.

மீண்டெழுந்தது கியூபச் சுற்றுலாத்துறை

ஹவானா, அக்.18- கொரோனா பெருந்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த கியூபாவின் சுற்றுலாத்துறை தற்போது மீண்டெழுந்துள்ளது. கியூபாவின் பல்வேறு இடங்களுக்கு ஏராள மான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கமான தாகும். தலைநகர் ஹவானா, வாரடேரோ, குவார்டலாவாகா, மேரோன் மற்றும் டிரினிடாட்  ஆகிய நகரங்கள் மற்றும் தீவுகள் மிகவும் புகழ்பெற்றவையாகும். இங்குள்ள கடற்கரைகளில் உலாவ ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. கியூபாவின் சுற்றுலாத்துறை அதிகாரப்பூர்வ மாக வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, 2022 ஆம்  ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 13 லட்சத்து 96  ஆயிரத்து 921 சுற்றுலாப் பயணிகள் கியூபாவுக்கு  வந்துள்ளார்கள். கடந்த ஆண்டின் 12 மாதங்களில் 5 லட்சத்து 73 ஆயிரத்து 944 பேர்தான் வந்து  சென்றனர். 2022இல் எஞ்சிய நான்கு மாதங்களில் மேலும் பல லட்சம் பயணிகளை கியூபா எதிர்பார்க்கிறது. வரும் ஆண்டுகளில் 40 லட்சம் அல்லது 50 லட்சம் பயணிகளை ஈர்ப்பது என்ற இலக்கையும் நிர்ணயித்திருக்கிறார்கள். கியூபாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் கனடாவில் இருந்துதான் எப்போதுமே அதிகமான அளவில் வருகிறார்கள். 2022இன் முதல் எட்டு மாதங்களில் 9 லட்சத்து 71 ஆயிரத்து  456 பேர் அங்கிருந்து வந்து சென்றுள்ளனர். அமெரிக்காவில் இருந்து 60 ஆயிரத்து 885  பேரும், ஸ்பெயினில் இருந்து 55 ஆயிரத்து  102 பேரும், ரஷ்யாவில் இருந்து 38 ஆயிரத்து 488 பேரும் வந்திருக்கிறார்கள் என்று அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நடப்பாண்டில் மட்டும் 115 கோடி அமெரிக்க டாலர்கள் அளவுக்கு சுற்றுலாத்துறை மூலம் வருமானம் கிடைக்கும் என்று கணித்திருக்கிறார்கள். மருத்துவத்துறைக்கு அடுத்த படியாக, சுற்றுலா மூலம் தான் அதிகமான அளவுக்கு வெளிநாட்டு  நாணயங்களை கியூபா ஈட்டி வருகிறது.

;