states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. நீதித்துறையில் அடிப் படை கட்டமைப்பு வசதி களை ஏற்படுத்தி தந்த தமிழ்நாடு முதல்வர், அமைச்சர்களுக்கு நன்றி. தமிழ்நாடு மக்கள் காட்டிய அன்பு, பாசம் விருந்தோம் பலை என்றைக்கும் மறந்துவிட மாட்டேன் என பிரிவு உபசார நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பண்டாரி பேசி னார்.
  2. போதைப்பொருள் கடத்தல் கும்பல் தொடர் பான வழக்கு தொடர் பாகவே தேசிய புலனா ய்வு அமைப்பு (என்ஐஏ) திங்களன்று 50 இடங் களில் (வடஇந்தியா முழு வதும்) சோதனை நடத்தி யது. பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்குக்கும், இந்த விசாரணைக்கும் தொடர்பில்லை என்று என்ஐஏ விளக்கம்.
  3. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட் பட்ட நேரியமங்கலம் என்ற இடத்தில் கேரள அரசுப்பேருந்து 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திலேயே ஒரு வர் பலியான நிலையில், 5 பேர் கவலைக்கிடம். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி க்கப்பட்டுள்ளனர்.
  4. குஜராத் மாநிலம் அக மதாபாத்தின் நவரங்புரா  பகுதியில் உள்ள ஆம்  ஆத்மி கட்சி அலுவல கத்தில் உள்ளூர் போலீ சார் சோதனை நடத்திய தாக  ஆம் ஆத்மி கட்சி  தலைவர் இசுதன் காத்வி குற்றஞ்சாட்டிய நிலை யில், சோதனை எதுவும் நடத்தவில்லை என்றும் ஆம் ஆத்மியின் டுவீட் மூலம் தான் இந்த சம்ப வம் குறித்த தகவல்கள் எங்களுக்கு தெரியும் என நவரங்புரா போலீசார் விளக்கம் அளித்துள்ள னர். 
  5. பாரத் ஜோடோ யாத்தி ரை பற்றி பாஜக ஏன்  இவ்வளவு கவலைப்படு கிறது? அவர்களுக்கு வேறு வேலை இல்லை யா? ராகுல் சட்டை (டி- சர்ட்) விலை குறித்து   கிண்டல் செய்கிறார்கள். ஆனால் பாஜகவினர் ரூ.2.5 லட்சம் மதிப்பி லான கண்ணாடிகளை அணிகிறார்கள். உள்துறை அமைச்சரே (அமித் ஷா) ரூ.80 ஆயி ரம் மதிப்புள்ள மப்ளர் அணிந்துள்ளார். ஆனால் தற்போது ராகுலின் சட்டையை வைத்து அர சியல் செய்கிறார்கள் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசியுள் ளார்.
  6. புதிய நாடாளுமன்ற கட்ட டத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட வேண்டும் என எங்கள் மாநிலம் (தெலுங்கானா) கோரி வருகிறது. ஒன்றிய அரசு  அறிவித்துள்ள மின்சார சீர்திருத்தத்தை தெலுங் கானா கண்டிப்பாக எதிர்க்கும் என டிஆர்எஸ் எம்எல்சி கே.கவிதா கூறியுள்ளார்.
  7. எலிசபெத் ராணியின் மரணத்தைத் தொடர்ந்து, குடியரசாக மாறுவது பல்வேறு நாடுகளில் விவாதங்கள் எழுந்துள்ளன. பிரிட்டன் அரசர் அல்லது அரசியைத் தங்கள் நாட்டின் தலைவராக 14 நாடுகள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றான, ஆன்டிகுவா-பார்புடா விரைவில் பொது வாக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இது பிரிட்டன் அரச வம்சத்திற்கு எதிரானதல்ல. நாடு இறையாண்மை உடையதாக மாறும் விருப்பம் என்று அந்நாட்டின் பிரதமர் காஸ்டோன் பிரவுன் அறிவித்துள்ளார்.
  8. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் வன்முறைக் குற்றங்கள் பெருகியிருப்பதாகப் புதிய ஆய்வு கூறுகிறது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்தக் குற்றங்கள் குறைந்திருந்தன. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள குற்றங்களின் எண்ணிக்கை, பெருந்தொற்றிற்கு முன்பிருந்ததை விட அதிகமாக இருக்கிறது. ஒட்டுமொத்தமான எண்ணிக்கை கூடியுள்ளது. அதே வேளையில், டெட்ராய்ட், மியாமி, ஹவுஸ்டன் போன்ற மாகாணங்களில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  9. இராக்கின் வட பகுதியில் நடைபெற்ற சண்டையொன்றில் துர்க்கியே நாட்டின் படைவீரர்களில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். எல்லையைத் தாண்டி இராக் பகுதிகளுக்குள் நுழைந்து, அரசு எதிர்ப்புப் போராளிகள் மீது துர்க்கியே படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. அப்படிப்பட்ட தாக்குதல் ஒன்றில், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர்களை அந்நாட்டு ராணுவம் தாக்கியிருக்கிறது. பதில் தாக்குதலில் துர்க்கியே படை வீரர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இத்தகவலை துர்க்கியே பாதுகாப்புத்துறை அறிவித்திருக்கிறது.
;