states

இந்தி திணிப்பு எதிர்ப்பு - மொழி உரிமை பாதுகாப்பு மாநாடு

திருச்சி, நவ.3- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத் தின் சார்பில் இந்தி திணிப்பு - மொழி உரிமைப் பாதுகாப்பு மாநாடு திருச்சியில் நவம்பர் 5 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. திருச்சி மெயின் கார்டு கேட்  பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் பிற்பகல் 2 மணிக்கு மாநாடு துவங்குகிறது. மொழி போர் ஈகியர் சின்னச்சாமி நினைவிடத்திலிருந்து சிவ. வெங்கடேஷ் தலைமையில் எடுத்து வரப்படும் மொழி உரிமை சுடரை அமைப்பின் மாநில பொருளாளர் சைஜை ஜெ பெற்றுக் கொள்கிறார். மொழி போர் ஈகியர் நடராஜன்- தாலமுத்து நினை வரங்கில் வரலாற்றுக் கண்காட்சியை மாநில துணைத் தலைவர் நா.முத்துநிலவன் தலைமையில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கிறார். தொடர்ந்து நடைபெறும் மாநாட்டிற்கு அமைப்பின் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் தலைமையேற்கிறார். மாநில துணைத் தலைவர் ஆர்.நீலா வரவேற்க, அமர்வுகளுக்கு மாநில துணைத் தலைவர் நந்தலாலா, மாநில செயற்குழு உறுப்பினர் ச.தமிழ்ச்செல்வன், துணைப் பொதுச் செயலாளர் உமா ஆகியோர் தலைமையேற்கின்றனர். அமைப்பின் மதிப்புறு தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் பேரா.அருணன் மற்றும் செந்தலை ந.கவுதவன், திராவிடர் கழகத் தலைவர் அ.அருள் மொழி, எழுத்தாளர் பெருமாள் முருகன், சமூக செயற்பாட்டாளர் மருதையன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர். செயல் திட்டத்தை முன்வைத்து மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா பேசுகிறார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் சிங் காரவேலு, இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி ஆகியோர் ஆதரவு உரை வழங்குகின்றனர். தமுஎகச திருச்சி மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் நன்றி கூறுகிறார். மாநாட்டிற்கான ஏற்பாடுகளை தமுஎகச திருச்சி மாவட்டக் குழு விரிவாக செய்து வருகிறது.