states

தீக்கதிர் விரைவு செய்திகள்

இ-பைக் விற்பனையில் தமிழ்நாடு முதலிடம்

இ-பைக் விற்பனையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு பல் வேறு துறைகளிலும் முத லிடத்தில் இருப்பதற்கு கோவை முக்கியப் பங்கு வகிக் கிறது. டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல், எலக்ட் ரானிக்ஸ் போன்றவற்றில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

‘புதிய படைப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னேற்றம்’

புதிய படைப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாடு 3-வது இடத்துக்கு முன் னேறி உள்ளது. 2 ஆண்டு களில் மட்டும் 8 லட்சத்து 98  ஆயிரம் பேருக்கு புத்தாக்க  பயிற்சி அளிக்கப்பட்டுள் ளது. 325.64 ஏக்கரில் புதிய  தொழில் பேட்டை அமைக்க  அடிக்கல் நாட்டப்பட்டு பணி கள் தொடங்கப்பட்டுள்ளன. ஸ்டார்ட் அப் நிறுவனங் களை முன்னேற்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன என்று தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரி வித்துள்ளார்.

பழனி ரோப் கார் சேவை 45 நாட்களுக்கு நிறுத்தம்

பழனி கோவிலில் ரோப் கார் சேவை ஆகஸ்ட் 19 முதல் 45 நாட்களுக்கு நிறுத் தப்பட்டுள்ளது. வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்  கார் சேவை ரத்து என கோவில் நிர்வாகம் அறி வித்துள்ளது. மின் இழுவை ரயில் மற்றும் படிப்பதை வழி யாக செல்லுமாறு கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சந்திரயான்-3, லூனா-25 இடையே போட்டி இல்லை

சந்திரயான் - 3, லூனா - 25 இவற்றிற்கிடையே போட்டி என்று சொல்ல முடியாது; இரண்டும் ஒரே மாதிரியான பயணத்தில் தான் உள்ளது; சந்திரயான் - 3 நிலவின் தென் துரு வத்தில் பத்திரமாக இறங்கும் வகையிலும், எதிர்காலத்தில் சந்திரயான் - 4 நிலவில் இறங்கி அங்கு கிடைக்கும்  பொருட்களை பத்திரமாக பூமிக்கு எடுத்து வரும் வகை யிலும் திட்டமிடப்பட்டுள் ளது; இஸ்ரோவில் பயன் படுத்தப்படும் ராக்கெட்டின் வேகம் குறைவாக இருந்தா லும், வெற்றி வாய்ப்பு சிறப் பாக உள்ளது; இளைஞர்கள் ஆர்வம் காட்டினால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மேலும் வளர்ச்சி அடையும் என இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண் ணாதுரை தெரிவித்துள்ளார். 

அண்ணாமலையை  ‘பாரதப் பிரதம’ராக்கிய தமிழ்நாடு பாஜக!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணா மலை, “என் மண்; என் மக்கள்” என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும்  நடை - பயணம் மேற்கொண்டுள்ளார். ஜூலை 28 அன்று இராமேஸ்வரத்தில் பய ணத்தைத் துவங்கிய அண்ணாமலை, இராம  நாதபுரம், சிவகங்கை, மதுரை, விருது நகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியா குமரி மாவட்டங்களுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில்தான், அண்ணாமலை யை வருங்காலப் ‘பாரதப் பிரதமர்’ என  குறிப்பிட்டு தமிழ்நாடு பாஜக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு பாஜக-வின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு வெளி யிடப்பட்டு உள்ளது. அதில்தான், “வரும்  நாடாளுமன்றத் தேர்தலில் இந்த மக்கள்  விரோத ஊழல் திமுக காங்கிரஸ் கூட்ட ணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு K. அண்ணாமலை அவர்கள் நல்லாட்சியை மூன்றாவது முறையாகத் தொடரச் செய்  வோம்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

குஜராத் தேர்தலில்  ரூ.209 கோடியை செலவிட்ட பாஜக

குஜராத்தில் கடந்தாண்டு நடை பெற்ற சட்டப்பேரவை தேர்த லில், ரூ.209 கோடி செலவு செய்  ததாக தேர்தல் ஆணையத்திடம் பாஜக அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பா ளர்களின் தேர்தல் செலவுகளுக்காக சுமார் ரூ. 41 கோடி வழங்கப்பட்டது என் றும், விமானம் மற்றும் ஹெலிகாப்டர் உட்பட பயண செலவுகளுக்கு ரூ. 15  கோடிக்கு மேல் செலவிட்டதாகவும், கட்சி யின் பொது பிரச்சாரத்துக்கு ரூ. 160.62 கோடி செலவு செய்ததாகவும் தனது அறிக்கையில் பாஜக தெரிவித்துள்ளது.

பாஜக அரசின் 40 சதவிகித கமிஷன்: நீதிவிசாரணைக்கு சித்தராமையா உத்தரவு

கர்நாடகத்தில் கடந்த பாஜக ஆட்சியின் போது, அரசுத் திட்டப்பணிகளுக்கான காண்ட்ராக்டில்  பாஜக அமைச்சர்கள் 40 சதவிகிதம் கமிஷன் பெற்றதாக புகார்கள் எழுந்தன.  இதில் பாதிக்கப்பட்ட காண்ட்ராக்டர் ஒருவர் தற்கொலை யும் செய்து கொண்டார். இதுதொடர்பாக கர்நாடக மாநில அரசு காண்ட்ராக்டர்கள் பிரதமர் மோடிக்கு நேரடியாக கடிதம் எழுதினர். எனினும் ஊழலை ஒழிக்க வந்த ரட்சகன் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி, கடைசிவரை வாய்திறக்கவில்லை. நடவடிக்கையும் எடுக்கவில்லை.  கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தவுடன் பாஜக-வின் கமிஷன் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியாக அளித்தது. இது தேர்தலில் பாஜக-வுக்கு எதிரான முக்கிய மான பிரச்சாரமாக அமைந்தது. பாஜக ஆட்சியும் பறி போனது. கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. இந்நிலையில், தேர்தல் வாக்குறுதியில் கூறிய படி, கர்நாடகத்தில் முந்தைய பாஜக ஆட்சி யின்போது, காண்ட்ராக்டர்களிடம் 40 சதவிகித கமி ஷன் கேட்டது குறித்து, சித்தராமையா அரசு தற்போது  நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. வெள்ளிக்கிழமையன்று இதுதொடர்பாக பிறப்பித்துள்ள உத்தரவில், ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி நாகமோகன் தாஸ், 40 சதவிகித  கமிஷன் குறித்து விசாரிப்பார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

உணவுப்பொருட்களை கடத்தினால் தகவல் தெரிவிக்க வேண்டுகோள் 

சென்னை, ஆக.19-  சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுதுறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப் பட்டுள்ளது. அதில் பொது விநியோக பொருள்க ளான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் போன்றவற்றை கடத்துவ தும் பதுக்குவதும் குற்றமாகும் இந்த குற்றத்தை செய்யும் நபர்கள் மீது  கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றிய மையா பண்டங்கள் சட்டம் 1980-ன் கீழ்  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் பொது விநியோக பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்குதல்  தொடர்பான புகார்களை 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

காட்பாடி-திருப்பதி ரயில் ஒருவாரம் ரத்து 

சென்னை, ஆக,19- காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு காலை 10.55 மணிக்கு புறப்படும் பயணி கள் சிறப்பு ரயிலும் (எண் 07581), மறுமார்க்கமாக திருப்பதியில் இருந்து  காட்பாடிக்கு பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரயிலும் (எண் 07660) வருகிற 21ஆம் தேதிமுதல்   27ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து  செய்யப்படுகிறது.  இதே தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு காலை 5.30 மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி ரயில்  (எண் 06854) காட்பாடியுடன் நிறுத்தப் படும். மறுமார்க்கமாக இந்த ரயில் (எண்  06853) காட்பாடியிலிருந்து மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் சென்ற டையும். இதுபோல் பித்ரகுண்டாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை  4.45 மணிக்கு செல்லும் விரைவு ரயிலும் (எண் 17237) மறுமார்க்கமாக சென்னை  சென்ட்ரலில் இருந்து பித்ரகுண்டா வுக்கு மாலை 4.30 மணிக்கு செல்லும் விரைவு ரயிலும் (எண் 17238) வருகிற  21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை யில் முழுவதுமாக ரத்து செய்யப்படு கிறது. திருப்பதியில் இருந்து காட் பாடிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரயில் வருகிற 21ஆம் தேதி  முதல் 27ஆம்  தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 

‘நீட் தேர்வை ரத்துசெய்யாமல் தற்கொலைகளை தடுக்க இயலாது’

சென்னை, ஆக.19- நீட், ஐஐடி, ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதில் புகழ்பெற்ற ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள விடுதிகளில், மாணவர்கள் தற்கொலை  செய்து கொள்வதைத் தடுக்க அங்குள்ள மின்விசிறிகளில் ஸ்பிரிங்கு களும், அபாய ஒலி எழுப்பும் கருவிக ளும் பொருத்தப்படுகின்றன. இது வேதனையளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அன்பு மணி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் மாணவர்களின் தற்கொலைகளுக் கான காரணங்களை கண்டறிந்து அகற் றாமல், தற்கொலைகளை மட்டும்  தடுக்க நினைப்பது முழுமையாக தீர்வை வழங்காது என்று தெரிவித் துள்ளார். நீட், ஐஐடி-ஜே.இ.இ. தேர்வுகளை ரத்து செய்வது தான் மாணவர்களை தற்கொலைகளில் இருந்து தடுக்குமே தவிர, மின்விசிறிகளில் செய்யப்படும் மாற்றம் தற்கொலைகளை தடுக்காது என்று அவர் கூறியுள்ளார்.

தங்கம் விலை குறைந்தது

சென்னை, ஆக.19- தங்கத்தின் விலை கடந்த சில நாட்க ளாக குறைந்து வருகிறது. சனிக்கிழமை  கிராம் 5 ரூபாயும், ஒரு சவரன் 40 ரூபாயும் குறைந்துள்ளது.  கிராம் ரூ. 5,450-க்கும், பவுன் ரூ. 43,600-க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராம் 20 காசுகள் குறைந்து  ரூ. 76.50-க்கும், கிலோ ரூ. 200 குறைந்து ரூ. 76,500-க்கும் விற்பனை ஆகிறது.  ஆவணி மாதம் முகூர்த்த காலத்தில் தங்கம்  விலை குறைந்து வருவது நகை வாங்கு பவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை அளித்து உள்ளது.