states

ஸ்ரீமதி வழக்கில் அவதூறு பரப்பும் கயவன் மீது நடவடிக்கை எடுத்திடுக!

சென்னை, செப். 29- தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக யூடியூபில் தொடர்ச்சியாக அவதூறு பரப்பி வரும் கார்த்திக் பிள்ளை மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. கார்த்திக் பிள்ளை என்பவர் தனது யூடியூப் பக்கத்தில் கள்ளக் குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாகவும் அவரது தாய் செல்வி குறித்தும் மிக மோசமாக பேசுவதும் அவதூறு பரப்புவதுமான வேலையை செய்து வருகிறார். ஸ்ரீமதி குடும்பத்திற்கு ஆதரவு அளித்து வரும் அமைப்புகள் குறித்து குறிப்பாக அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கம் குறித்து மிக மோசமாக பேசி வருகிறார். மகளை இழந்து தவிக்கும் செல்வி குறித்து பொய்யான அவ தூறு பரப்புவது பாதிக்கப்பட்ட குடும்பத்தையே குற்றவாளி ஆக்குவது என்பது சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து கடலூர்  காவல்துறை கண்காணிப்பாளரி டம் ஸ்ரீமதியின் தாயார் செல்வியும் மாதர் சங்கத் தலைவர்களும் புகார் மனு அளித்தனர். மேலும், சென்னையில் டி 1 காவல் நிலையத்தில் மாதர் சங்கத்தின் சார்பாக புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. காவல்துறையின் இத்தகைய  செயல்பாடு கடும் கண்டனத்திற் குரியது. ஸ்ரீமதியின் தாயார் இது  குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது கார்த்திக் பிள்ளை மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் வழிகாட்டி உள்ளது. இந்த நீதிமன்ற வழிகாட்டுதலை மாதர் சங்கம் வரவேற்கிறது. மாதர் சங்கத்தின் புகார் மீதும்  உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும் பாதிக்கப்படு கிற பெண்கள் மீது அவதூறு பரப்பும் இத்தகைய கயவர்கள் மீது எந்தவித காலதாமதமும் இன்றி காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை ஒன்றில் மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.