states

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா

சென்னை, செப்.19- சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டி.ராஜாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த 12 ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி எம். துரைசாமியை பொறுப்பு தலைமை நீதி பதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் ஒன்றிய அரசின் சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறி விப்பு வருமாறு:- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலக பணிகளை மேற் கொண்டு வரும் (பொறுப்பு தலைமை நீதிபதி) நீதிபதி எம்.துரைசாமி வரும் 21 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளார்.

இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதி யாக உள்ள நீதிபதி டி.ராஜா தலைமை நீதிபதி அலுவலக பணிகளை கவனிப் பார். பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்படுவார். நீதிபதி ராஜா வரும் 22 ஆம் தேதி முதல் பொறுப்பு தலைமை நீதிபதிகளுக்கான பணிகளை மேற் கொள்வார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி டி.ராஜா, மதுரை மாவட்டம் தேனூர் கிராமத்தில் கடந்த 1961 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி பிறந்தார். பள்ளிப்படிப்பை தேனூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியிலும் உயர் கல்வியை மதுரை பசுமலை பள்ளி யிலும் பி.ஏ. மற்றும் ஏம்.ஏ. படிப்பை மதுரை கல்லூரியிலும் முடித்தவர். சட்ட படிப்பை மதுரை அரசு சட்டக்கல்லூரி முடித்து கடந்த 1988 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். உச்சநீதிமன்றத்தில் வழக்கறி ஞராக பணி செய்தார். சிவில், குற்ற வியல், அரசியல் சாசன வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர். கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி சென்னை உயர் நீதி மன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப் பட்டார்.  பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதிபதி ராஜா அடுத்த ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி பணி ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.