states

அதிகளவு மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜூலை 8- திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்தில் பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, கூடுதல் அரசுச் செயலர் பிர தீப் யாதவ், திருச்சி மாவட்ட ஆட்சி யர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செய லாளர் வைரமணி, எம்.எல்.ஏ.க்கள் அப்துல் சமது, சௌந்தரபாண்டி யன், ஸ்டாலின் குமார், முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பெரியசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆட்சியர் பிரதீப் குமார் பேசுகையில், “திருச்சி மாவட்  டத்தில் கடந்தாண்டு 2,227 விபத் துகள் நிகழ்ந்துள்ளன. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மூலம்  ஏற்பட்ட விபத்துகள், 1,208. இவ் விபத்துகளில் திருச்சி மாநகரத்தில்  150 பேரும், மாவட்டத்தில் 540 பேரும் உயிரிழந்துள்ளனர். இவர் களைத் தவிர, எந்த வாகனத்திலும் செல்லாத 118 பாதசாரிகளும் உயிரி ழந்து உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் விபத்து கள் அடிக்கடி நடக்கும் ‘ஹாட்  ஸ்பாட்டுகள்’ பட்டியலிடப்பட்டுள் ளன. மேலும், விபத்துகள் ஏற்படும் இடங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்து கின்றனர். தொடர்ந்து ஒரே இடத்தில் விபத்துகள் நடக்கும்பட்சத்தில் அந்த இடத்தில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன” என் றார். கூட்டத்தில் அமைச்சர் எ.வ. வேலு பேசுகையில், “செல்போன்  பேசிக் கொண்டே செல்பவர்கள், ஹெல்மெட் அணியாமல் செல்ப வர்கள் மீது காவல்துறை கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகளவு மாணவர்களை ஏற்றிச்  செல்லும் ஆட்டோக்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து படிக்கட்டில் யாரும் பய ணிக்காத நிலையை ஏற்படுத்த வேண்டும். சாலைகளில் மாடு களை அவிழ்த்து விடுவதால் பல  நேரங்களில் விபத்துகள் ஏற்படு கின்றன. மாவட்ட நிர்வாகம் மாட்டைப் பிடித்து இருமுறை அப ராதம் விதிக்க வேண்டும். இதை மீறி னால், மாட்டை ஏலம் விட்டு அரசு கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும்” என்றார்.