states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

 1. இந்தியாவிற்கு அகதி களாக வந்த இலங்கைத் தமிழர்களை திருப்பி அழைத்துச் செல்ல இலங்கை அரசு சார்பில் சிறப்புக் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாடு முகாம்களில் தங்கி யுள்ள 3,800 இலங்கைத் தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்ப தயாராக இருப்பதாக சென் னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தின் மூலம் பதிவு செய்துள்ள னர்.
 2. தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக் கழகம் நீர்நிலையை ஆக்கிர மித்துள்ளது 100% ( வருவாய்  ஆவணங்களின்படி) உறுதியாகி யுள்ளது என சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. இடத்தை காலி செய்ய தஞ்சாவூர் வட்டாட்சியர் அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக சாஸ்த்ரா பல்கலைக்கழக நிர்வா கம் தொடர்ந்த வழக்கு 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள் ளது.
 3. சென்னை தாமஸ் மவுண்ட் - கிண்டி ரயில் நிலையம் இடையே உள்ள மூடப்பட்ட கேட்டை கடந்து சென்ற ஷாரிகா என்ற 10-ஆம் வகுப்பு மாணவி மின்சார ரயிலில் அடிபட்டு உயிரி ழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 4. நீட் தேர்வை எதிர்த்து போரா ட்டம் நடத்தியது, தேர்தலின் போது அதிக வாகனங்களை பயன் படுத்தியது, அனுமதி இல்லாமல் கட்சி அலுவலகத்தை திறந்தது என  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மீதான மூன்று வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
 5. வைகை அணையில் திறக்கப்பட்ட உபரி நீரால் மதுரை வைகை ஆற்றில் செல்லும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளது. அபாய அளவை தாண்டி தண்ணீர் செல்வ தால் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
 6. பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள நாசி (மூக்கு) வழியே செலுத்தப்படும் அவசரகால கொரோனா தடுப்பூசி க்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.
 7. கர்நாடக தலைநகர் பெங்க ளூரு ஏற்கெனவே வெள்ளத் தில் தத்தளித்து வரும் நிலையில், அடுத்த 2-3 நாட்களுக்கு பெங்களூ ருவில் கனமழை நீடிக்கும் என்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளார் வானிலை ஆய்வு விஞ்ஞானி கீதா அக்னிஹோத்ரி.
 8. பெங்களூருவில் தேங்கி யுள்ள வெள்ள நீரை வெளி யேற்ற தீர்வு காணக் கோரி மாநில  பாஜக அரசுக்கு எதிராக, கர்நாடக  இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலை வர் முகமது ஹரிஸ் தேங்கி நிற்கும் மழைநீரில் ரப்பர் டியூப்பில் மிதந்து போராட்டம் நடத்தினார்.
 9. தில்லியில் இதுவரை இல்லாத அளவில் ரூ1,200 கோடி மதிப்பிலான மெத்தம்பேட்டமைன் என்ற போதைப்பொருள் பறி முதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 ஆப்கானிஸ்தான் நாட்டவர் களை விசாரித்ததில்  லக்னோவில் உள்ள குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 312 கிலோ போதைப்பொருள் சிக்கியது.
 10. கென்யாவின் ஜனாதிபதித் தேர்தலில் வில்லியம் ரூடோவின் வெற்றி சரியானதுதான் என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வாக்குப்பதிவில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர் வேட்பாளர் ரய்லா ஓடிங்கா வழக்குத் தொடர்ந்தார். ஆனால், நீதிமன்றத்தின் ஏகோபித்த தீர்ப்பாக இதைச் சொல்வதாகச் சொன்ன தலைமை நீதிபதி மார்த்தா கூமே, “மனுக்களை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம். வில்லியம் ரூடோ ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கிறோம்” என குறிப்பிட்டார்.
 11. ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் உள்ள ரஷ்யத் தூதரகத்தின் முன்பாக வெடிகுண்டு வெடித்த நிகழ்வுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்தத் தூதரகத்தில் பணிபுரிந்து வந்த இரண்டு ஊழியர்கள் இதில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும் பலரும் உயிரிழந்துள்ளனர் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. தற்கொலைத் தாக்குதல் நடத்திய நபர் பாதுகாவலர்களால் கொல்லப்பட்டார்.
 12. சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் சரிந்துள்ள நிலையில், அக்டோபர் மாதத்தில் கச்சா எண்ணெய் எடுப்பதைக் குறைத்துக் கொள்ள பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள்(ஓபெக்) அமைப்பு முடிவு எடுத்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைப் பலப்படுத்தவே இந்த முடிவாகும். மொத்தத்தில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பீப்பாய்கள் எண்ணெய் குறைவாக எடுக்கப்படும் என்று ஓபெக் அமைப்பு தெரிவித்துள்ளது. அதோடு, சந்தையின் நிலை பற்றி தேவைப்பட்டால் அமைச்சர்களின் அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
;