states

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

புதுதில்லி, ஜூன் 12- கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தில்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாக வும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருப்பதாகவும் காங்கிரஸ் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். சோனியா காந்தி விரைவில் நலம்பெற  வேண்டுமென அரசியல் தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் தங்களது விழைவைத் தெரிவித்துள்ளனர்.