states

சின்ன வெங்காயம்: கிலோ ரூ.230 ஆக உயர்ந்தது

சென்னை, ஜூலை 11- தமிழ்நாட்டில் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் அதிகரித்தது.  வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து சென்னைக்கு குறைவாக வருவதால் விலை யேற்றத்துடன் காணப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனைக்கு தக்காளி கிலோ ரூ.100-க்கு இன்று விற்கப் பட்டது. இதனால் காய்கறி கடை களில் சில்லறை விற்பனை ரூ.130  முதல் ரூ.150 வரை விற்கப்படு கிறது.  தக்காளி இப்போது அபூர்வ உணவு பொருளாக மாறிவிட்டது. வீட்டு சமையல்களில் தக்காளியை பெயர் அளவுக்குதான் பயன்படுத்து கின்றனர். தக்காளியை போல இஞ்சி கிலோ ரூ.300-க்கும், பச்சை மிளகாய் ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சமையலில் குறைந்த அளவில் இதன் பயன்பாடு இருந்தாலும் கூட கட்டாயம் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.  இந்த நிலையில் சின்ன வெங்காயம் விலையும் எகிறியது. கடந்த மாதம் ரூ.50-க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் படிப்படியாக ரூ.100 வரை உயர்ந்தது. கிலோ ரூ.230-க்கு விற்கப்படுகிறது.  கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 50 முதல் 60 டன் சின்ன  வெங்காயம் வந்த நிலையில் திடீரென வரத்து குறைந்தது. 20 டன் அளவில் சின்ன வெங்கா யம் வருவதால் தட்டுப்பாட்டின் கார ணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. சின்ன வெங்காயத் தின் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.