states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பாலியல் வன்கொடுமை: பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

மொராதாபாத்  செப். 22 - பாஜக ஆளும் உத்த ரப்பிரதேசத்தின் மொராதா பாத்தில் 15 வயது சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் வழிப்பறி செய்து, கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தனர்.  சம்பவம் நடத்த இடத்தில் இருந்து 2 கிமீ  தொலைவில் உள்ள தனது  வீட்டிற்கு  உடை எதுவுமின்றி நிர்வாண மாக சாலை, வீதி மார்க்கமாக நடந்தே வந்துள் ளார். சாலையில் சிறுமி நடந்து வந்த பொழுது யாரும் உதவாமல், வீடியோ எடுத்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 7-ஆம் தேதி அரங்கேறியுள்ளது.  ஆனால் சிசிடிவி காட்சிகள் வெளியான பின்பே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாவட்ட எஸ்.பி. வரை புகார் சென்ற பிறகே போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து பெயரளவில் சிலரை கைது செய்துள்ளனர்.

சிக்கன 3 அடுக்கு ஏசி பெட்டியால் ரயில்வேக்கு ரூ. 231 கோடி லாபம்!

புதுதில்லி, செப். 22 - சிக்கன விலையில் அறிமுகப்படுத்தப் பட்ட எகானமி 3 அடுக்கு ஏசி பெட்டிகள் மூலம்  ஓராண்டில் ரூ. 231 கோடி வருவாய் கிடைத்துள் ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. அனைத்து தரப்பு மக்களும் ஏசி வகுப்பு  பெட்டிகளில் பயணிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு, மானியத்துடன் கூடிய  எகானமி ஏசி 3 அடுக்கு பெட்டிகளை இந்திய ரயில்வே  கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தி யது. வழக்கமாக ஏசி 3 அடுக்கு பெட்டியில் 72  பெர்த்கள் இருக்கும். எகானமி ஏசி பெட்டி யில் 83 பெர்த்கள் இருக்கும். அதாவது, வழக்கமான 3 அடுக்கு ஏசி பெட்டியில் இரண்டு பக்கம் பெர்த்கள் இருக்கும் நிலை யில், இவற்றில் ஸ்லீப்பர் வகுப்பை போல 3  பெர்த்கள் இருக்கும்.  அதோடு இந்த பெட்டி களில் கட்டணம், வழக்கமான 3 அடுக்கு ஏசி பெட்டிகளை விட 6 முதல் 7 சதவிகிதம்  வரை குறைவாகும். இந்நிலையில, இந்த எகானமி ஏசி பெட்டி களை அறிமுகப்படுத்திய ஓராண்டில் ரூ. 231  கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ரயில்வே  புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2021 ஆகஸ்ட் முதல் 2022 ஆகஸ்ட்  வரை 21 லட்சம் பயணிகள் இந்த சிக்கன ஏசி  பெட்டிகளில் பயணித்துள்ளனர். இதுவரை  370 சிக்கன ஏசி பெட்டிகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. இவற்றின் தேவை அதிகரித்துள் ளதால் மேலும் பல எகானமி ஏசி பெட்டிகளை  சேர்க்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

அதானி அண்ணனின் சொத்து மதிப்பு 850 சதவிகிதம் அதிகரிப்பு

அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி, துபாயில் இருந்து வர்த்தகம் செய்யும் வணிகங்களை நிர்வகித்து வருகிறார். மேலும் அவர் கடந்த ஆண்டு 49-வது இடத்தில் இருந்தார், ஆனால் தற்போது ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஒரு வருடத்தில் மட்டும் அவரது சொத்துக் கள் 28 சதவிகிதம் அதிகரித்து ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், அவரது சொத்து 850 சதவிகிதம் அதிகரித்து, அவரை பணக்கார வெளிநாடு வாழ் இந்தியராக்கியுள்ளது.

பணக்கார பெண்மணி  பால்குனி நாயர்

இந்தியாவின் பணக்காரப் பெண்மணியாக பயோடெக் தலைவர் கிரண் மஜும்தார் ஷா இருந்து வந்தார். இந்நிலையில், அழகு மற்றும் ஆரோக்கிய ஈ-காமர்ஸ் தளமான நைகா (Nykaa) பங்குச் சந்தையில் பட்டியலி டப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் தலைவர் பால்குனி நாயர் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல, ஜெப்டோ (Zepto) என்னும் நிறுவனத்தை நிறுவி ஹூரண் பட்டியலில், முதல் முறையாக 19 வயதே ஆகும் இளம்பெண்ணான கைவல்யா வோஹ்ரா இடம் பிடித்துள்ளார்.

வகுப்பறையில் நடனமாடிய  பேராசிரியர்: பணியிடை நீக்கம்

பதான்கோட், செப்.22- வகுப்பறையில் போதையில் மாணவர்கள் முன் நடனமாடியதாக கூறப்படும் பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள குருநானக் தேவ் கல்லூரியில் பணியாற்றும் கணிதப் பேராசிரியரான ரவீந்தர்குமார்  வகுப்பறைக்கு வந்து தான் கையில் வைத்திருந்த பாட்டிலிலிருந்த திரவத்தைக் குடித்துள்ளார். தொடர்ந்து பஞ்சாபி திரைப்படப் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பேராசிரியர் தனது சொந்தப் பணத்தில் மது அருந்துவதாகவும், தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றும் கூறுகிறார்.   இது குறித்து பதான்கோட் கல்லூரியின் முதல்வர் பூபேந்தர் கவுர் கூறுகையில், ரவீந்தர் குமார் பகுதி நேர கணிதப் பேராசிரியராக உள்ளார். அவரை உடனடியாக பணியிலிருந்து விடுவித்துவிட்டோம் என்றார். ரவீந்தர் குமாரோ தாம் குடிபோதையில் இல்லை எனக் கூறியுள்ளார். மற்றவர்களை குஷிப்படுத்தவே நடனமாடியதாகவும்,  என் வாழ்நாளில் நான் மதுவைத் தொட்டதில்லை. நீங்கள் யாரை வேண்டுமானாலும் கேட்டுக்கொள்ளலாம் என்றார்.  ரவீந்தர் குமாருக்கு  பதிலளித்துள்ள பூபேந்தர் கவுர், “ பேராசிரியர் குடிபோதையில் இல்லையென்றாலும் அவர் வகுப்பறையில் இது போன்ற செயலில் ஈடுபட்டிருக்கக் கூடாது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க மற்ற பேராசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என்று கூறினார்.

;