states

img

மணிப்பூரில் ஆயுதக் கிடங்கை கைப்பற்றியது பாதுகாப்புப் படை

பாஜக ஆளும் மணிப்பூர் மாநி லத்தில் வன்முறை சம்பவங் கள் மீண்டும் தலைதூக்கி யுள்ளன. கடந்த 5 நாட்களில் மட்டும் சிஆர்பிஎப் நடத்திய தாக்குதலால் குக்கி பழங்குடியைச் சேர்ந்த 15க்கும் மேற் பட்டோர் உயிரிழந் துள்ளனர். இன்னும் 6 பேரை காண வில்லை. குறிப்பாக இம்பால் பள்ளத் தாக்கு, ஜிரிபாம், சுராசந்த்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிப்பால் அங்கு தொடர்ந்து வன்முறை பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், மணிப்பூரின் ஜிரிபாம் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களில் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்து களை பாதுகாப்புப் படையினர் கைப் பற்றியதாக மணிப்பூர் காவல்துறை வியா ழனன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.புதனன்று ஜிரிபாம் மாவட்டத்தின் சம்பா நகர், நாராயண்பூர் மற்றும் தங்போ புஞ்ச்ரே பகுதி மற்றும் சுராசந்த்பூர் மாவட்டத்தின் கோட்லியான் கிராமத்தில் ஆயுதங்கள், வெடிமருந்துகள், நவீன வகை பீரங்கி, துப்பாக்கிகள் உள்ளிட்ட வைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டில் தயாரித்த ஆயுதங்கள் சுராசந்த்பூர் மாவட்டத்தின் கோட்லி யான் கிராமத்தில் ஆயுதக் கிடங்கே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அங்கு 9 மிமீ துப்பாக்கிகள், குறுகிய தூர பீரங்கிகள், 5 ஏகே 47 துப்பாக்கிகள், 303 ரைபிள் துப்பாக்கிகள், பீரங்கி குண்டுகள் அடங்கிய பெட்டிகள் என பல்வேறு ஆயுதங்கள் அடங்கிய கிடங்கு ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இதில் பீரங்கிகள் அனைத்தும் உள்நாட்டில் தயாரித்தவை என செய்திகள் வெளியாகியுள்ளன.