states

தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்திட தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தல்

சென்னை, செப்.18-  சிறுபான்மையினர் மீது சங்பரிவார் கும்பல் தொடர்ச்சியாக தாக்குதலை  தொடுக்கிறது. இதில் தமிழக அரசு உறுதி யான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமைப்பின் ஒருங்கி ணைப்பாளர்கள் பேராசிரியர் அருணன்,  க.உதயகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள  அறிக்கை வருமாறு:  சமீபத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவார் கும்பல்களின் அட்டகாசங்கள் அதி கரித்து வருகின்றன. கோயம்புத்தூர் மாவட் டத்தில் பெரியார் உணவகம் என்ற பெய ரில் ஒரு ஓட்டல் கடை திறப்பதற்கான ஏற்பாட்டினை செய்து வந்த நிலையில் அந்த உணவகத்திற்கு  சேதம் ஏற்படுத்தி பெரியார் பெயரில் உணவகம் திறக்கக் கூடாது என்று பெரும் கலவரத்தில் இந்த  கும்பல் ஈடுபட்டுள்ளது. இது வன்மையா கக் கண்டிக்கத்தக்கது.   அதேபோன்று வெள்ளிக்கிழமை அன்று உத்தமபாளையம் பள்ளி மாண வர்கள் தொழுகைக்காக சென்று தொழுகை முடித்து திரும்பிய போது, அவர்கள் பள்  ளிக்குச் செல்லக்கூடாது என்று இந்து  முன்னணியை சேர்ந்த ஒரு கும்பல் அந்த  மாணவர்களை மிரட்டி தாக்கியுள்ளது. அத்துடன் அவர்களுக்கு அனுமதி அளித்த  ஆசிரியரையும் மிரட்டி அச்சுறுத்தியுள்ளது.   

ஆசிரியரையும் மிரட்டி அச்சுறுத்தியுள்ளது.    இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களை  கைது செய்து அப்புறப்படுத்தியுள்ளது. அச்சுறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் போராடியவர்களை கைது செய்துள்ளது. அதேபோல் சென்னை  அசோக் நகர் அரபு பள்ளியில் படித்த மாண வரை 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர்  அடித்து துன்புறுத்தியதோடு அவர் அணிந்  திருந்த குல்லா பற்றியும் முஸ்லிம்களைப்  பற்றியும் கேவலமாக திட்டி அச்சுறுத்தி இருக்கிறார். தொடர்ச்சியாக நடைபெறும் இச்சம்பவங்களில் தமிழக போலீசார் சிறு பான்மை மக்களுக்கு போதிய பாதுகாப்பு  அளிக்காதது மட்டுமின்றி காவல்துறை யில் புகார் செய்தாலும் அவற்றை பதிவு  செய்து நடவடிக்கைக்கு உட்படுத்துவது இல்லை என்ற நிலை மிகவும் மோசமாகும்.   தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு சிறு பான்மை மக்களை பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.  முதலமைச்சர் கீழுள்ள  காவல்துறை தன்னிச்சையாக செயல்படு வது போன்ற நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது.   

தமிழக முதல்வர் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டிப்பதோடு, அவர்கள் விரைந்து செயல்பட்டு உறுதியான நடவடிக்கை மேற்  கொள்ள, தக்க உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.   மத நல்லிணக்கத்திற்கு தமிழக மக்  கள் என்றும் உறுதுணையாக இருந்து வந்துள்ளனர். அந்த நிலையை கெடுத்து சில சங்பரிவார் கும்பல்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கிளப்ப முயற்சி செய்கின்  றன. தமிழக மக்கள் இத்தகைய மதவெறி சக்திகளை புறந்தள்ள வேண்டும் என தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கோரு கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். 

;