states

தில்லி விவசாயிகள் எழுச்சியின் வெற்றிகரமான இரண்டாமாண்டு நவ.26-இல் நாடு தழுவிய பேரணி; ஆளுநர்களிடம் மனு

புதுதில்லி, செப்.6- மோடி அரசு கொண்டு வந்த 3 வேளாண்  சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற தீரமிக்க  தில்லி விவசாயிகள் போராட்டத்தின் இரண்  டாம் ஆண்டை நாடு முழுவதும் கடைப் பிடிக்க சம்யுக்த கிஷான் மோர்ச்சா முடிவு  செய்துள்ளது. புதுதில்லியில் உள்ள ராகப்கஞ்ச் குருத்  வாராவில் சம்யுக்த கிஷான் மோர்ச்சாவின் தேசிய பொதுக்குழு கூட்டம், கடந்த ஞாயிற்  றுக்கிழமையன்று நடைபெற்றது. ருல்டு சிங், தஜிந்தர் சிங் விர்க், ஏ. ஹன்னன் முல்லா, தர்ஷன் பால் மற்றும் ராகேஷ் திகா யத் ஆகியோர் பொதுக்குழுவிற்குத் தலைமை தாங்கினர். இந்த பொதுக்குழுவில், அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உத்தரவாதப்படுத்தும் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று,  மின்சார சட்டத்தைத் திரும்பப் பெற வேண் டும்; பயிர்க் காப்பீட்டை முறைப்படுத்த வேண்  டும்; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்  கும் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இந்த கோரிக்கைகளை முன்  வைத்து, விவசாயிகள் இயக்கத்தின் இரண்  டாம் ஆண்டு நினைவு நாளான நவம்பர் 26 அன்று, அனைத்து மாநிலங்களிலும் சம்  யுக்த கிஷான் மோர்ச்சா சார்பில் மாபெரும் பேரணிகளை நடத்துவது; அதன் முடிவில் மோர்ச்சாவின் பிரதிநிதிகள், அந்தந்த மாநி லங்களின்  ஆளுநர்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

“லக்கீம்பூர் கெரியில், விவசாயிகள் கார்  ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவத் தில், ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சரும், முக்கிய குற்றவாளியின் தந்  தையுமான அஜய் மிஸ்ரா தேனியை கைது செய்ய வேண்டும்; விவசாயிகளுக்கு எதி ரான அனைத்து வழக்குகளையும் உடனடி யாக திரும்பப் பெற வேண்டும், மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டு காலமாக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்  பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்  

என வலியுறுத்திய சம்யுக்த கிஷான் மோர்ச்சா பொதுக்குழு, இந்த கோரிக்கைகளை முன் வைத்து, “செப்டம்பர் 15 முதல் 25 வரை, சம்யுக்தா கிஷான் மோர்ச்சா சார்பில் நாடு முழுவதும் தாலுகா அளவில் பிரச்சார இயக்கம் நடத்துவது, மாவட்ட அளவில் பொதுக்கூட்டங்களை நடத்துவது, நாடாளு மன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்து, அதன்மூலம் விவ சாயிகளின் கோரிக்கைகளை நாடாளு மன்றத்தில் எதிரொலிக்கச் செய்வது” என்று  தீர்மானித்துள்ளது. லக்கிம்பூர் கேரி படுகொலையின் முத லாம் ஆண்டு நினைவு நாளான அக்டோபர் 3  ஆம் தேதியை ‘கறுப்பு நாளாக’ கடைப் பிடிப்பதென்றும் பொதுக்குழு  முடிவு செய்  துள்ளது. முன்னதாக சம்யுக்தா கிஷான் மோர்ச்சா இந்த பொதுக்குழு, “சம்யுக்தா கிஷான்  மோர்ச்சா (அரசியல் சார்பற்றவர்கள்)” என்று தங்களை அழைத்துக் கொள்ளும்  ஒரு சில அமைப்புகளின் பொய் பிரச்சா ரத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன், “அந்தப் ‘பிளவுவாத குழுக்கள்’ சம்யுக்தா  கிஷான் மோர்ச்சாவை விட்டு வெளியேறி விட்டனர்” என்றும், “இனி அவர்கள் தங்கள்  அமைப்பின் ஒரு பகுதியாக இல்லை”  என்றும் அறிவித்தது. புதிய ஒருங்கிணைப்புக் குழுவை ஏற்  படுத்த, 11 பேர் கொண்ட வரைவுக் குழு வையும் பொதுக்குழு அமைத்தது. இந்த வரைவுக் குழுவின் பரிந்துரைகள் அடுத்த பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும். அப்போது, தேசிய அமைப்பு புதிய ஒருங்கி ணைப்புக் குழுவை இறுதி செய்யும் என்றும் கூறியது. மேலும், ‘ஸ்வராஜ் அபியான்’ மற்றும் ‘ஜெய் கிசான் அந்தோலனின்’ தலைவர் யோகேந்திர யாதவ், வேறு இடத்தில் பொறுப்பேற்க முடிவு செய்திருப்பதால்,  தன்னை ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று முறை யிட்டதன் அடிப்படையில், அவர் தற்போது சம்யுக்தா கிஷான் மோர்ச்சாவின் ஒருங்கி ணைப்புக் குழுவில் இல்லை என்றும் அறி வித்தது.

;