states

ரூ.6,000 கோடி மோசடி: நிதி நிறுவன இயக்குநர்கள் வீடுகளில் சோதனை

வேலூர், ஜூலை 6- அதிக வட்டி தருவதாக கூறி ரூ.6,000 கோடி நிதி மோசடி செய்த நிறுவன இயக்குநர்கள் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. வேலூர் காட்பாடியை தலைமை  இடமாகக் கொண்டு ஐஎப்எஸ் நிதி  நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த  நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.8,000 வரை வட்டியாக பணம் தருவதாக அறிவிப்பு வெளியானது. இதற்காக அந்த நிறுவனம் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் முகவர்களை நியமித்தது அவர்கள் மூலம் பொது மக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி பணத்தை வாரி குவித்தது. குறிப்பிட்ட காலம் வரை பொது மக்களுக்கு வட்டி பணம் வழங்கிய நிதி நிறுவனம் திடீரென பணம் தராமல் நிறுத்தியது. இது குறித்து புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், வட மாவட்டங்களில் ஐஎப்எஸ் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து ரூ. 6,000 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

ஐஎப்எஸ் நிறுவன இயக்குநர் லட்சுமி நாராயணன், ஜனார்த்தனன், வேத நாராயணன், மோகன் பாபு ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர். இவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் முக்கிய முகவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பணம், கார்கள் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஐஎப்எஸ் இயக்குநர்களின் உறவினர்கள் வீடுகளில் வியாழனன்று(ஜூலை 6) காலை அமலாக்கத்துறை அதிகாரி கள் அதிரடி சோதனை நடத்தினர். வேலூர், சத்துவாச்சாரி பகுதிகளில் உள்ள இயக்குநர்களின் உறவினர் வீட்டிற்கு காலை 9 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அவர்களுடன் வங்கி அதிகாரிகள் சிலர் சென்றனர். ஐஎப்எஸ் நிறுவனத்தில் இருந்து  பல கோடி பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர்களின் உறவினர்கள் வீடு களில் ஆவணங்களை கைப்பற்றி அதன் மூலம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர். அமலாக் கத்துறை சோதனையால் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதே போல் செங்குட்டை பகுதி யிலுள்ள நிதி நிறுவன இயக்கு நரின் உறவினர் வீட்டிலும் அமலாக் கத்துறையினர் சோதனை நடத்தி னர். நெமிலியை சேர்ந்த முகவர் ஒரு வரது வீட்டிலும் இந்த சோதனை நடந்தது.