states

தனியாரின் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளில் 47.1 சதவிகிதம் அங்கீகரிக்கப்படாதவை!

புதுதில்லி, செப்.8- இந்தியாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு  தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப் பட்ட ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளில், 47.1  சதவிகித மாத்திரைகள் அங்கீகரிக்கப்படா தவை என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழ கம் மற்றும் பப்ளிக் ஹெல்த் பவுண்டேஷன் ஆப் இந்தியா (The Public Health Foundation of India - PHFI) இணைந்து, கடந்த 2019-ஆம் ஆண்டு தனியார் மருத்துவ மனைகளில் பயன்படுத்தப்பட்ட ஆன்டி பயாட்டிக் மாத்திரைகள் குறித்த ஆய்வை மேற்கொண்டன. 5 ஆயிரம் நோய் எதிர்ப்பு மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களைச் சேர்ந்த 9 ஆயிரம் மொத்த விற்பனையாளர்களிடம் இந்த  ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவில், பிரபல மருத்துவ இதழான லான்செட்டில் (Lancet) தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில், கடந்த 2019-ஆம் ஆண்டு தனியார் மருத்துவமனைகளில், இந்திய அரசு உரிய அங்கீகாரத்துடன் வழங்கும் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் 49 சதவிகிதமும், மத்திய  மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணை யத்தால் அங்கீகரிக்கப்படாத ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் 47.1 சதவிகிதமும் பயன் படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகரிக்கப்படாத ஆன்டி பயாட்டிக் மாத்திரைகளில், செஃபாலோஸ்போரின்ஸ், மேக்ரோலைட்ஸ், பென்சிலின் ஆகியவை அதிகளவு பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மக்களின் உடலில் உள்ள இயற்கையான எதிர்ப்பாற்றலை குறைப்பதில், அங்கீகரிக்கப்படாத ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளின் பயன்பாட்டுக்கு முக்கியப்பங்கு உள்ளதாகவும், இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிப்பதால், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளின் விற்பனை பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், முகாம்களில் விநியோகிக்கப்பட்ட மருந்துகள் ஆய்வில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்தியாவில் பயன்படுத்தப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளில் 85-90 சதவிகித மருந்து கள் தனியார் நிறுவனங்களால்தான் தயாரிக்கப் படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதில், இந்தியாவில் கடந்த 2019-ஆம் ஆண்டில் அதிகளவிலான ஆன்டிபயாட்டிக் மருந்தாக அசித்ரோமைசின் 500 மிகி 7.6 சதவிகிதமும், செபிக்சிம் 200மிகி 6.5 சதவிகிதமும் மக்களால் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

;