கோவை மாவட்டத்தில் 4 ஆயிரத்திற் கும் மேற்பட்ட கிரில் ஒர்க் ஷாப்கள் இயங்கி வருகிறது. இரும்பிலான கதவு, ஜன்னல், சட்டர் உள்ளிட்டவைகள் இந்த கிரில் ஒர்க் ஷாப்புகளில் செய்யப்படுகிறது. இதில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தொழில் ஒன்றிய பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரண மாக பெரிதும் பாதிக்கப்பட்டது. பின்னர் ஜிஎஸ்டி பிரச்சனையில் பெரிதும் பாதிக்கப் பட்டது. பின்னர் கொரோனா தொற்று பர வல் காரணமாக மொத்த தொழிலும் மந்தம் ஏற்பட்ட நிலையில், சிறுசிறு யூனிட்டு களாக உள்ள இத்தொழில் கடுமையான அடிவாங்கியது. தற்போது இரும்பு உள் ளிட்ட மூலப்பொருட்களின் கட்டுப்பாடற்ற விலை உயர்வால் கிரில் தொழில் விழி பிதுங்கி கிடக்கிறது. கோவை மாவட்டத்தில் தற்போது சுமார் 450 நிறுவனங்கள் இயங் காமல் முடங்கியுள்ளது. ஆர்டர் கிடைக்காமலும், முன்னர் வாங் கிய ஆர்டர் மூலப்பொருட்களின் விலை உயர்வால் நிர்ணயித்த தொகைக்கு செய்ய முடியாமல் பல நிறுவனங்கள் திணறி வரு கிறது.
இதுகுறித்து கிரில் உற்பத்தி தொழில் முனைவோர்கள் கூறுகையில், ‘‘இரும்பு விலை அதிகமாகி விட்டது. கடந்த ஒரு ஆண்டில் எம்.எஸ் ஆங்கில் வகை இரும்பு விலை 43 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக உயர்ந்தது. எம்.எஸ் பைப் ரக இரும்பு 52 ரூபாயில் இருந்து 100ஐ தொட்டுள்ளது. எம்எஸ் சீட் விலையும் ஏறக்குறைய இதே அளவிற்கு உயர்ந்தது. பிபிஜிஎல் ரக ஸ்டீல் சீட் விலையும் 66 ரூபாயில் இருந்து 102 ரூபா யாக அதிகரித்தது. இந்த அபரிமிதமான விலை ஏற்றம் இந்த தொழிலை முடக்கி விட்டது. வெகுவாக உயர்ந்த விலையால் பழைய நிலைமையில் கிரில் கேட், ஜன் னல், கதவுகளை எங்களால் உற்பத்தி செய்ய முடியவில்லை. ஏழை எளிய மக்கள் வாங்கும் விலையை கிரில் பொருட்கள் தாண்டி விட்டது. கடந்த காலங்களில் இரும்பு பொருட்கள் ஆண்டிற்கு ஒரு முறை சிறிதளவு உயர்த்தப்படும். இதனால் குறைந்த விலையில் எங்களால் உற்பத்தி செய்ய முடிந்தது. இப்போது நிலைமை முற்றிலும் மாறி விட்டது” என்றனர். கோவை மாவட்டத்தின் பல சிறு, குறு தொழில் நிறுவனங்களின் நிலையும் இது வாகத்தான் இருக்கிறது. மூலப்பொருட் களின் விலை உயர்வு என்பது, செயற்கை யாக ஊக பேர வணிகத்தின் விளையாட் டால் ஏற்படுகிறது. ஒரு கட்டுப்பாடற்ற நிலை யும், பதுக்கி வைத்தலும் பிரதானமாக உள் ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டிய ஒன் றிய அரசு கார்ப்ரேட்டுகளின் நலன் கருதி வேடிக்கை பார்ப்பதாக குற்றம்சாட்டு கின்றனர்.