states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. எரிபொருள் தட்டுப்பாடால் வரும் காலத்தில் மின்சார விநியோகம் பாதிக்கப்படும் என்று இத்தாலிய அரசு கருதுகிறது. அதனால் மின் நுகர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறார்கள். தனது 40 விழுக்காடு மின்சார உற்பத்திக்காக  இயற்கை எரிவாயுவையே இத்தாலி நம்பியிருக்கிறது. உக்ரைன் நெருக்கடியால் எரிவாயு கிடைப்பதில்லை. இதனால் குடியிருப்புகள், நிறுவனங்கள், விடுதிகள் உள்ளிட்டவற்றில் நுகர்வுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். மருத்துவமனைகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு தரப்பட்டுள்ளது.
  2. வெனிசுலா மற்றும் கொலம்பியா ஆகிய இரண்டு தென் அமெரிக்க நாடுகளுக்கும் இடையிலான நிலரீதியான எல்லைப்பகுதி மீண்டும் திறக்கப்படுகிறது. இதை வெனிசுலாவின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவும், கொலம்பியாவின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சரான ஜெர்மன் உமாஹாவும் அறிவித்தனர். செப்டம்பர் 26 ஆம் தேதியன்று முதல் திறந்து விடப்போகிறார்கள். 2015 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான நில எல்லை மூடப்பட்டிருந்தது.
  3. இந்தோனேசியாவின் மேற்கு பபுவா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சேதம் பற்றிய விபரங்கள் கிடைக்காவிட்டாலும், 6.2 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டிருப்பதாக பதிவாகியிருக்கிறது. ஒரே நாளில் நான்கு முறை இந்த மாகாணம் குலுங்கியிருக்கிறது. தொடர்ந்து ஏற்படும் நிலநடுக்கங்கள் மக்கள் மத்தியில் பெரும் பதற்றமான சூழலை உருவாக்கியிருக்கிறது. அங்கிருந்து மக்கள் வெளியேறும் நிலைமை ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.