states

தீக்கதிர் விரைவு செய்திகள்

கல்லூரிகளுக்கு  5 நாட்கள் விடுமுறை

சென்னை,செப். 30- ஆயுத பூஜையையொட்டி அக்டோபர் 4, 5 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், 3ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளுக்கு விடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாள். இதனால் அக்டோபர் 3ஆம் தேதி வேலை நாளாகும். இந்த நிலையில் அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அண்ணா  பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரி கள், உறுப்புக் கல்லூரிகளில் வரும் 3ஆம் தேதி சிவில், மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக அக்டோபர் 8 ஆம் தேதி  வேலை நாளாக செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளார். 

ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் அதிரடியாக உயர்வு

சென்னை,செப்.30 நடைமேடை கட்டணம் 10 ரூபாயாக  வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையில் 20 ரூபாயாக உயர்த்தப் பட்டிருப்பது ரயில் பயணிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள ரயில் நிலை யங்களில், நடைமேடை கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூட்ட நெரிசலைத் தவிர்ப் பதற்காக ஒரு சில ரயில் நிலையங்களில் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அண்மையில் ரயில்வே நிர்வாகம் அனு மதி அளித்திருந்தது. அதன்படி, கடந்த கோடைக் காலத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கச் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணம் 10  லிருந்து 15 ரூபாயாக ஆக உயர்த்தப் பட்டது.  இந்தநிலையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி,  செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில்  நிலையங்களில் நடைமேடைக் கட்டணம்  10 லிருந்து 20 ரூபாயாக உயர்ந்துள்ளது. விழாக் காலங்களில் கூட்டத்தைத் தவிர்க்க அக்டோர் 1 முதல் வருகிற ஜனவரி 31  வரைக்கும் கட்டண உயர்வு  அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப் ப்பட்டுள்ளது.  இதனிடையே நடைமேடை கட்டண உயர்வுக்கு ரயில் பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கொடநாடு வழக்கு  சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை, செப்.30- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கொடநாடு கொலை,  கொள்ளை சம்பவம் கடந்த 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி நடந்தது. எஸ்டேட்  காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட  நிலையில், அங்கிருந்த ஏராளமான ஆவணங்கள் கொள்ளையடிக்கப் பட்டன. இந்த வழக்கு தொடர்பாக மறுவிசாரணை நடந்து வருகிறது. இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப் பட்டன. ஒவ்வொரு தனிப்படையினரும் பிரிந்து சென்று பலரிடம் விசாரணை நடத்தினர்.  முக்கிய குற்றவாளியான சயான், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன்,  சம்சீர் அலி, மனோஜ்சாமி மற்றும் அரசு  தரப்பு சாட்சிகள் மற்றும் ஜெயலலிதா வின் தோழியான சசிகலா மற்றும் அவரது உறவினர் விவேக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பலரிடம் விசாரணை நடந்துள்ளது. வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இந்த வழக்கு  விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி  டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட் டுள்ளார்.

9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை, செப்.30- ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சனிக்கிழமையன்று (அக்.1) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய  வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதியாக எஸ்.முரளிதர் 

சென்னை, செப்.30- சென்னை உயர்நீதிமன்றத்தின் 33-வது தலைமை நீதிபதியாக எஸ்.முரளிதர் பதவி ஏற்க உள்ளார்.  1961 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி பிறந்த  நீதிபதி எஸ். முரளிதர், ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி யாக உள்ளார். இவர், 1984 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்குரைஞராக பதிவு செய்து, சென்னை சிவில் நீதிமன்றங்களில் பணியை தொடங்கினார். பிறகு, தில்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற வழக்குகளில் ஆஜராகியுள்ளார்.  அதன் பிறகு, 2006 ஆண்டில் தில்லி உயர்நீதிமன்ற கூடுதல்  நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக 2020 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.முரளிதர் நியமிக்கப்பட்டுள்ளார். 1970-களுக்கு பின்னர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டனர். இந்த  நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்தவரான முரளிதர் தலைமை  நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் எப்போது? அமைச்சர் 

சென்னை, செப்.30- தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் அக்டோர் இறுதியில் தொடங்கும் என்று உயர்க் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித் தார். சென்னையில் செய்தியாளர் களை சந்தித்த அமைச்சர் பொன்முடி,“ பொறியியல் முதல் சுற்று கலந்தாய்வில் 10,351 பேர் பணம் கட்டி கல்லூரிகளில் சேர்ந்து  விட்டனர். 2-வது சுற்று நடந்து வரு கிறது” என்றார். கல்லூரிகளை தேர்வு செய்த  14,153 பேர் 10 ஆம் தேதிக்குள் சேர  வேண்டும். 5016 மாணவர்கள் பொறியியல் சேவை மையங்க ளுக்கு சென்று சேர வேண்டும். மேல் நோக்கி நகர்வுக்காக 4289 பேர்  காத்திருக்கின்றனர் என்றும் அவர் கூறினார். 3-வது சுற்று கலந்தாய்வு அக்டோ பர் 13 ஆம் தேதி தொடங்கும். தமிழ்நாட்டில் பி.ஆர்க் கல்லூரிகள் 44 உள்ளன. இதற்கான தர கலந்தாய்வு நடைபெறும். பொறி யியல் முதலாம் ஆண்டு வகுப்பு 4 ஆம் சுற்று முடிந்து அக்டோபர் இறுதியில் தொடங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.  நீட் தேர்வு முடிவு தாமதமாக  வந்ததால் கலந்தாய்வு தள்ளிப்போ னது. கடந்த வருடங்களை போல  இல்லாமல் அண்ணா பல்கலைகழ கம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி களில் காலி இடங்கள் இருக்காது. அனைத்து இடங்களும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது  எனவும் கூறினார்.

மந்த நிலையில் ஜெர்மனி

பெர்லின், செப்.30- எரிபொருள் நெருக்கடி, அதிகரித்து ள்ள பணவீக்க விகிதங்கள் மற்றும்  சுருங்கும் உலக வர்த்தகம் ஆகியவற் றால் ஏற்கனவே மந்த நிலையை ஜெர்மனி  எட்டி விட்டது என்று அந்நாட்டின் பொரு ளாதார ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரி வித்துள்ள அந்த மையத்தின் பொருளா தார வல்லுநர் கிடோ பால்டி, “துரதிரு ஷ்டவசமாக, கண்ணுக்கு எட்டிய  வரையில் தீர்வு எதுவும் தென்பட வில்லை. ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு  உற்பத்தி 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு களில் ஐந்து விழுக்காடு வரையில் சரிவைக் காணப் போகிறது. கடுமை யான எரிபொருள் விலையேற்றத்தால் வாங்கும் சக்தியில் பெரும் இழப்பு ஏற் பட்டுள்ளது. பல நிறுவனங்கள் நட்டத்தில் மூழ்கும் ஆபத்து உருவாகியிருக்கிறது” என்றார். மேலும் பேசிய அவர், “ஏற்றுமதிக்கு முன்னுரிமை தரும் ஜெர்மனிக்கு கொரோனா பெருந்தொற்று மற்றும் ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி ஆகியவை கூடுதல் சுமைகளாகி விட்டன. ஆகஸ்டு மாதத்தில் ஜெர்மனியின் பணவீக்கம் 7.9 விழுக்காடாக அதிகரித்தது. எரிபொருள் விலைகள் 35.6 விழுக்காடு அதிகரித்ததே இந்தப் பணவீக்க உயர்வுக்குக் காரண மாக இருந்துள்ளது. அதோடு, உள்நாட்டி லும், வெளிநாட்டிலும் பொருட்களுக் கான கிராக்கி குறைந்ததால், நிறுவனங் களுக்கு வேலைகள் கிடைக்கவில்லை” என்று குறிப்பிட்டார். கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத பண வீக்கத்தை ஜெர்மனி சந்தித்து வரு கிறது. பல்வேறு நெருக்கடிகளில் சிக்கா மல் தப்பித்த ஜெர்மனி தற்போது மந்த நிலையில் விழுந்து விட்டது என்று பெர்லினில் இருந்து இயங்கும் இந்தப் பொருளாதார ஆய்வு மையத்தின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ஐரோப்பிய  நாடு களில் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டதாக ஜெர்மனி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

;