states

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் தான் பலம்

 சரத் பவார் பேட்டி மும்பை,ஜூலை 2-  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித்பவார் இரண்டாவது முறையாக அக்கட்சிக்கு துரோகம் செய்து, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஓடிச்சென்று, பாஜக-ஏக்நாத் ஷிண்டே அரசில் துணை முதல்வராக பொறுப்பை பிடித்துள்ளார். இது மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-  தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இது புதிது கிடையாது, 1980 இல் கட்சியில் இருந்து 58 எம்எல்ஏக்கள் வெளியேறி வெறும் 6 எம்எல்ஏக்கள் மட்டுமே என்னு டன் இருந்தனர். பின்னர் மீண்டும் கட்சியை  பலப்படுத்தி, எம்எல்ஏக்களின் எண்ணிக் கையை உயர்த்தினேன். என்னை விட்டு விலகியவர்கள் தங்கள் தொகுதிகளில் தோற்றுப்போனார்கள். எதிர்க்கட்சித் தலை வர் யார் என்பதை முடிவு செய்வது சபாநாய கரின் உரிமை. 3 நாட்களுக்குள் எதிர்க்கட்சி தலைவர் குறித்து காங்கிரஸிடமும், உத்தவ் தாக்கரேவிடம் பேசவுள்ளோம். எங்களின் முக்கிய பலம் சாமானிய மக்கள் தான், அவர்கள் தான் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.  எனது கட்சி பிரிந்தது என்று நான் ஒரு போதும் கூறமாட்டேன், இந்த பிரச்சனை எனது கட்சி தொடர்பானது அல்ல, இது மக்களின் பிரச்சனை. வெளியேறியவர் களின் எதிர்காலம் குறித்து நான் கவலைப் படுகிறேன். இதற்கான பெருமையை பிரதமர் மோடிக்கு வழங்க விரும்புகிறேன்.  எனது கட்சியை சேர்ந்த சிலர் தற்போது  வேறொரு நிலைபாட்டை எடுத்துள்ளனர்.  கட்சியில் செய்யப்பட வேண்டிய மாற்றங் கள் குறித்தும், முக்கிய பிரச்சனைகள் குறித்தும், ஜூலை 6 ஆம் தேதி அனைத்து தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தேன்; ஆனால் அதற்குள் சிலர் மாறுபட்ட நிலைபாட்டை எடுத்துள்ள னர். 2 நாட்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு  முடிந்து போன கட்சி என்று கூறினார். தேசிய வாத காங்கிரஸ் கட்சி மீது நீர்ப்பாசன புகார் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். ஆனால் எனது கட்சியினர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து அமைச்சராகியுள்ளனர். இதன் மூலம் எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இல்லை என நிரூபணமாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என்று தெரிவித்தார்.  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நம்பத் தகுந்த முகமாக யார் இருப்பார்கள்?” என்ற கேள்விக்கு தனது கையை உயர்த்தி  ‘சரத் பவார்” என்று  சரத் பவார் பதிலளித்தார்.

;