சென்னை, செப்.9- தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங் களில் 50 விழுக்காடு இடங்களில் அரசு கல்லூரி மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மொத்த முள்ள இடங்களில் 50 விழுக்காடு இட ங்களில் சேர்க்கப்படும் மாணவர் களிடம் அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூ லிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்த ரவை எதிர்த்து நிகர்நிலை பல்கலைக் கழகங்களும், தனியார் மருத்துவக் கல் லூரிகளும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு விசா ரித்தது. நிகர் நிலை பல்கலைக் கழகங்கள், தனியார் மருத்துவ கல்லூரி கள் தரப்பில், அரசு கல்லூரிகளில் வசூ லிக்கும் கட்டணத்தை சுயநிதி கல்லூ ரிகள் மற்றும் நிகர் நிலை பல்கலைக் கழகங்கள் வசூலிக்க வேண்டும் என்று எப்படி நிர்ப்பந்திக்க முடியும். ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு விதமான கட்டணங்கள் வசூலிக் கப்படும் நிலையில், இது அரசியல் சட்ட த்துக்கு விரோதமானது. 50 விழுக்காடு மாணவர்களிடம் 50 விழுக்காடு கட்ட ணம் வசூலிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் விரும்பினால், தனியார் கல்லூரிகளுக்கு மானியம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில், தனியார் மருத்து வக் கல்லூரிகள் லாபநோக்குடன் செயல்படக் கூடாது என்பதை உறுதி செய்ய உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளதாகவும், தனியார் கல்லூரி களை முறைப்படுத்த நீதிமன்றங்களும் தொடர்ச்சியாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட் டப்பட்டது. நிபுணர் குழு நியமித்து முழு மையாக ஆய்வு செய்த பிறகே, 50 விழுக்காடு மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளின் கட்டணத்தை வசூ லிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்ததாகவும் விளக்கமளிக் கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனியார் மருத்து வக் கல்லூரிகளும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் 50 விழுக்காடு இடங்களுக்கான கட்டணம் நிர்ண யிப்பதற்கான விதிமுறைகளை வகுக்க தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அதி காரம் வழங்கிய சட்டப்பிரிவு செல்லும் அதேசமயம், 50 விழுக்காடு இடங்க ளில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு கல்லூரி கட்டணம் வசூலிக்கப் படுவதால், மீதமுள்ள 50 விழுக்காடு இடங்களுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. அத னால் தகுதி வாய்ந்த மாணவர்களால் சேர்க்கை பெற முடியாது. 50 விழுக் காடு இடங்களுக்கு அரசு கல்லூரி கட்ட ணம் வசூலிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்து புதிய உத்தரவை பிறப் பிக்க தேசிய மருத்துவ ஆணையம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.