மும்பை, செப்.24- மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே, முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கோப்புகளை புரட்டும் புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசைக் கவிழ்த்த சிவசேனா அதிருப்தி தலை வர் ஏக்நாத் ஷிண்டே, தற்போது பாஜக ஆதரவுடன் முதல்வராக இருந்து வரு கிறார். இந்நிலையில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் நாற்காலியில், அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினரு மான ஸ்ரீகாந்த் ஷிண்டே அமர்ந்து கோப்புக்களை புரட்டுவதும், ஸ்ரீகாந்த் ஷிண்டே உட்கார்ந்து இருக்கும் நாற்கா லிக்கு பின்னால் வைக்கப்பட்டுள்ள பல கையில், ‘மகாராஷ்டிர அரசு - முதல் வர்’ என எழுதப்பட்டு இருந்ததும் எதிர்க் கட்சிகள் மத்தியில் கடும் விமர்சனத் திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த புகைப்படம் தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மகேஷ் தபாசே, “நீங்கள் சூப்பர் முதலமைச்சராக ஆகி விட்டீர்களா? இந்த செயலுக்காக நீங்கள் மகா ராஷ்டிர மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் “ என குறிப்பிட்டுள்ளார்.
“ஆதித்யா தாக்கரே (உத்தவ் தாக்கரே மகன்) அமைச்சராக இருந்து, விவகாரங்களை கையாண்டதே பாஜக வுக்கு பிரச்சனையாக தெரிந்தது. ஆனால், இன்று ஏக்நாத் ஷிண்டேவின் மகன் அமைச்சரும் இல்லை, எம்எல்ஏ-வும் இல்லை. முன்பு முதல்வர் நாற்காலியை கேலி செய்த துணை முதல்வர் தேவேந் திர பட்னாவிஸுக்கு எனது அனுதாபங் கள்” என்று சிவசேனா தலைவர் பிரி யங்கா சதுர்வேதி சாடியுள்ளார். இதற்கு ஸ்ரீகாந்த் ஷிண்டே பதில ளித்துள்ளார். அதில், “நான் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். எனக்கு அரசு வழி முறைகள் நன்கு தெரியும். நேற்று முதல் வர் பங்கேற்ற காணொலி காட்சி வழி யிலான ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. அதனால், மகாராஷ்டிர அரசு என்ற பலகை அந்த இருக்கைக்குப் பின்னால் வைக்கப்பட்டிருந்தது. அதை நான் கவனிக்கவில்லை. யாரோ வேண்டுமென்றே ரகசியமாக நான் அந்த இருக்கையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை எடுத்து சமூக வலைத் தளங்களில் பரப்பியுள்ளனர்” என்று சமாளித்துள்ளார். மேலும், “குறிப்பிட்ட படம் முதல மைச்சரின் அரசு பங்களா அல்லது அலு வலகத்தில் எடுக்கப்பட்டது அல்ல. தானேயில் உள்ள ஏக்நாத் ஷிண்டேயின் வீட்டில் உள்ள அலுவலகத்தில் எடுக் கப்பட்டது” என்றும் கூறியுள்ளார்.