சென்னை, ஜூலை 3 - பொது சிவில் சட்டம் இந்தியாவிற்கு சரிவராது என்று 21-ஆவது சட்ட ஆணையம் கூறிவிட்ட நிலையில், புதிதாக கருத்துக் கேட்பு நடத்துவது தேவையற்றது என நாடாளுமன்ற நிலைக்குழுவில் எதிர்க்கட்சிகள் தங்களின் எதிர்ப்பை முன்வைத்துள்ளன. மேலும், 2024 மக்களவைத் தேர்தலுக்கு 300 நாட்களே இருக்கும் நிலையில், இவ்வளவு அவசர அவசரமாக கருத்துக் கேட்பு நடத்துவது ஏன், என்று கேள்வி எழுப்பியிருக்கும் எதிர்க்கட்சி கள், ஒன்றிய பாஜக அரசின் தேர்தல் ஆதாய உள்நோக்கங்களின் அடிப்படையிலேயே பொது சிவில் சட்ட விவகாரம் மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளன. பொது சிவில் சட்டம் இந்தியாவிற்கு சரிவராது; அது தேவையும் இல்லை என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையிலான 21-வது சட்ட ஆணையம், மூன்றாண்டுகளுக்கு முன்பே அறிக்கை தாக்கல் செய்துவிட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட- 185 பக்கங்களைக் கொண்ட அந்த விரிவான அறிக்கையில், “நாட்டில் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code - UCC) அவசியம் இல்லை; தற்போதைய சூழலில் அது விரும்பத் தக்கதும் அல்ல!” என்று கூறப்பட்டிருந்தது. பொது சிவில் சட்டம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, 22-ஆவது சட்ட ஆணை யம் மற்றும் சட்ட அமைச்சக பிரதிநிதிகளுக்கு, பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, நிலைக்குழு கூட்டம், அதன் தலை வரும், பாஜக எம்.பி.யுமான சுஷில் குமார் மோடி தலைமையில் திங்களன்று நடை பெற்றது. குழுவின் 31 உறுப்பினர்களில் 17 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், சட்ட ஆணைய அதிகாரிகள் ஆஜ ராகி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதி லளித்தனர். ஜூன் 13 அன்று வெளியிடப்பட்ட பொது அறிவிப்பைத் தொடர்ந்து தொடங்கப் பட்ட கருத்துக் கேட்புக்கு, இதுவரை 19 லட்சம் பரிந்துரைகள் வந்துள்ளதாக தெரிவித்தனர். காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் தொடர் பான உந்துதலின் அடிப்படையிலேயே, கருத்துக் கேட்பு துவங்கப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டினர். சிவசேனாவின் சஞ்சய் ராவத் பேசுகை யில், பல நாடுகளில் பொது சிவில் சட்டம் இருந்தாலும், வெவ்வேறு சமூகங்கள் மற்றும் பிராந்தியங்களின் கவலைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று வலி யுறுத்தினார். அத்துடன், கருத்துக் கேட்பு நடத்தப்படும் நேரத்தையும் (மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு இருப்பதை யும்) கேள்விக்கு உட்படுத்தினார். காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் பொது சிவில் சட்டத்திற்கான கருத்துக்கேட்பு நடத்தப்படும் பின்னணியில் உள்ள நோக்கத்தை கேள்வி எழுப்பினார். தேர்தல் ஆதாயத்திற் காகவே இந்த விவாதம் துவங்கப்பட்டுள்ள தாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பொது சிவில் சட்டம் அவசியமானது என்று பாஜக எம்.பி. மகேஷ் ஜெத்மலானி ஆதரவாக பேசினார். அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற விவாதங்களை முன்னிறுத்தி, பொது சிவில் சட்டம் அவசியம் என்றார். அனைத்து சட்டங்களுக்கும் விதிவிலக்கு கள் உண்டு என்று குறிப்பிட்ட குழுவின் தலைவர் சுஷில் குமார் மோடி, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியினரை, பொது சிவில் சட்ட வரம்பிலிருந்து விலக்கி வைப்பது குறித்து பேசினார். சில வடகிழக்கு மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல், இது போன்ற மத்தியச் சட்டங்களை அமலாக்கு வதற்கு ஏற்கெனவே வழிவகை இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். திமுக எம்.பி பி.வில்சன், காங்கிரஸ் எம்.பி. விவேக் தன்கா ஆகியோர் தனித்தனியாக எழுத்துப்பூர்வ அறிக்கைகளை சமர்ப்பித்தனர். “ஏற்கெனவே 21-ஆவது சட்ட ஆணை யத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட பொது சிவில் சட்டம் குறித்து மீண்டும் விவாதிக்க நினைப்பது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி நடத்திய ஆய்வை முற்றிலும் நிராகரிப்பது போல் உள்ளது. பாஜக அரசின் இந்த நடவடிக்கை, 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டே மீண்டும் கையிலெடுக்கப்பட்டு உள்ளது. பொது சிவில் சட்டம் குறித்து 22-ஆவது சட்ட ஆணையம் ஆய்வு செய்யும் என்று கூறி யிருப்பது ஒரு கண்துடைப்பு நாடகம்” என்று அவர்கள் தங்களின் கடிதத்தில் குற்றச்சாட்டுக் களை அடுக்கினர்.