கடந்த 8 ஆண்டுகளாக பாஜக தங்கள் கூட்டணிக் கட்சிகளை மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. இதனால் பல கட்சிகள் கூட்டணியை முறித்துக் கொண்டன. இப்போது, பாஜக-வுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் கட்சிகள் கூட ஏதோ ஒரு கட்டாயத்தின் பேரில்தான் கூட்டணியில் உள்ளன. 2024 மக்களவைத் தோ்தலுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு புத்துயிர் அளிக்க பாஜக முயற்சித்து வருகிறது. முக்கியமாக ஆந்திரா வில் சந்திரபாபு நாயுடுவுடனும், பஞ்சாப்பில் சிரோ மணி அகாலி தளத்துடனும் பாஜக பேச்சு நடத்து கிறது. மகாராஷ்ராவில் சிவசேனாவை உடைத்து ஒரு பகுதியை தங்களுடன் இணைத்துள்ளது. அதேபோல சரத் பவார் கட்சியையும் உடைத்து தங்கள் கைக்குள் கொண்டு வந்துள்ளது. தோ்தல் களம் தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதால்தான் பாஜக பிற கட்சிகளை இழுத்து வந்து கூட்டணி அமைக்க வலியுறுத்துகிறது. ஆனால், இந்த முயற்சி பாஜகவுக்கு தோ்தலில் வெற்றியைப் பெற்றுத் தராது.
உமர் அப்துல்லா, முன்னாள் ஜம்மு - காஷ்மீர் முதல்வர்