states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த மே 19 அன்று ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில், இது வரை 76% அளவில் 2,000 ரூபாய்  நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பி விட்டதாகவும், வங்கிகளுக்குத் திரும்பிய 2,000 ரூபாய் நோட்டுகளில் சுமார் 87%  டெபாசிட்களாகவும், 13% ரூபாய் நோட்டுகளாகவும் மாற்றப்பட்டுள்ளன எனவும் ரிசர்வ் வங்கி தகவல் தெரி வித்துள்ளது.

தொலைந்து போன, திருடு போன செல்போன்கள் குறித்து புகாரளிக்க “கால் ட்ராக்கர் (call tracker)” என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகப்படுத்தியது வேலூர் மாவட்ட காவல்துறை.

கர்நாடகாவில் பாஜக முன்னாள் முதல்வர்  பசவராஜ் பொம்மை உள்பட பல பாஜக தலைவர்கள் சட்டவிரோதமாக பணத்தை பிட்காயினில் முதலீடு செய்த தாக எழுந்த புகாரை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைத்துள்ளது அம்மாநில அரசு.

சீனாவில் மருத்துவம் படித்து வந்த புதுக்கோட்டை காமராஜர்புரத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் (23) கடந்த மாதம் அங்குள்ள (சீனாவில்) ஆற்றில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், தூதரகம் மூலம் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

சென்னையில் 1 கிலோ தக்காளி ரூ.60க்கு விற்கும் தமிழ்நாடு அரசின்  நடவடிக்கைக்கு தேமுதிக பொதுச்செய லாளர் விஜயகாந்த் வரவேற்பு தெரி வித்துள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், செவ்வாயன்று இடுக்கி, கண்ணூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது கேரள வானிலை அய்வு மையம். இதேபோல கோவை, நீலகிரியிலும் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை அய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்கு இடையே எந்த மோதலும் இல்லை. இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது என தென்னிந்திய  நடிகர் சங்கம் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் ஜூலை 11 அன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன.

புகார்கள் மிக அதிகமாக வருவதால் இந்தி யாவில் 65 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். அதாவது கடந்த மே 1 முதல் மே 31 வரை மொத்தம் 65,08,000 வாட்ஸ் அப் கணக்குகளை தடை செய்துள்ளதாக வாட்ஸ் அப் நிறு வனம் ஆதார அறிக்கையுடன் தகவல் வெளியிட்டுள்ளது.

வட்டார கல்வி அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 12 வரை அவகாசம் அளித்துள் ளது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுவாரியம்.

இஸ்ரேல் அரசாங்கத்தின் நீதித்துறை சீர்திருத்தத் திட்டங்களுக்கு எதிராக கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் போராட்டம் அரங்கேறி வரும் நிலையில், நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான வடக்கு ஹைபா துறைமுகம் போராட்டக்காரர்களின் பிடியில் சிக்கி யுள்ளது. 

உலகச் செய்திகள்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பில் சேர எத்தியோப்பியா விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருக்கிறது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் கிழக்குப் பகுதியில் உள்ள எத்தியோப்பியா, தனது விண்ணப்பத்திற்கு சாதகமான பதில் வரும் என்று எதிர்பார்க்கிறது. ஐ.நா. சபை, ஆப்பிரிக்க யூனியன் மற்றும் அணிசேரா நாடுகள் இயக்கம் ஆகியவற்றில் நிறுவன உறுப்பினராக எத்தியோப்பியா இருப்பது குறிப்பிடத்தக்கது.

பால் பொருட்கள் ஏற்றுமதி செய்வதில் ஆசியாவிலேயே முதலிடத்தை ஈரான் பிடித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயக் கழகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி 2022 ஆம் ஆண்டில் ஈரான் முதலிடத்திற்கு வந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 15 கோடியே 83 லட்சம் டன் பால் பொருட்களை ஈரான் ஏற்றுமதி செய்திருக்கிறது. ஆசிய நாடுகளின் ஏற்றுமதியில் ஈரான் மட்டும் 17 விழுக்காடு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.

ஆப்பிரிக்காவின் மாலி நாட்டில் அமைதிப் பணியில் ஈடுபட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் படைகள் அங்கிருந்து வெளியேற முடிவெடுத்துள்ளன. இந்த அமைதிப்படையின் நடவடிக்கைகள் வெற்றி பெறவில்லை என்றும், தங்கள் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திவிட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாட்டின் அரசாங்கம் கோரியிருக்கிறது. அமைதிப்பணிக்கு சம்பந்தப்பட்ட நாட்டு அரசின் ஒப்புதல் வேண்டும் என்பதால், வெளியேறும் முடிவுக்கு ஐ.நா.சபை வந்துள்ளது.

;