states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பஞ்சாபில் மீண்டும் பழைய  ஓய்வூதிய திட்டம்

அமிர்தசரஸ், அக்.21- பஞ்சாபில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் பகவந்த் மான் தனது  டுவிட்டர் பக்கத்தில், ‘‘பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டத்தில்  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும்  அறிமுகப்படுத்துகிறது. இந்த முடிவுக்கு பஞ்சாப் அமைச்சரவை  முதற்கட்டமாக அனுமதி வழங்கியுள்ளது. நாங்கள் சொல்வதை செய்கிறோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.

ரயிலில் தீ : 150 பேர் தப்பினர்

புவனேஸ்வர், (ஒடிசா) அக்.21- ஒடிசாவில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 150-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். புவனேஸ்வர் ஒடிசா  மாநிலம் பத்ரக் - காரக்பூர் இடையிலான பறக்கும் ரயில் பஹானாகா ரயில் நிலையத்தை அடைந்தபோது, அந்த ரயிலின்  கடைசி பெட்டியில் திடீரென புகை கிளம்பியது. இதனால் பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பயணிகள் கூச்சல் எழுப்பினர். பின்னர் தகவலறிந்த ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார்.  கடைசிப் பெட்டியில் இருந்து தீ வேகமாக பரவிக்  கொண்டிருந்த நிலையில், ரயிலுக்குள் இருந்த 150க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலில் இருந்து வெளியே குதித்து தப்பினர்.  பலரை ரயில்வே அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.   இந்த ரயிலில் 700-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

ஹரியானா : பட்டாசு விபத்து பலி அதிகரிப்பு

ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே உள்ள நகக்ரோலா கிராமத்தில் உள்ள வீட்டில் பட்டாசு  வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் அவர்களது உறவினர்கள் இருவர் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். வெடி விபத்தில் காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் பகவான் தாஸ் என்ற கலா (40), அவரது மகன் மனீஷ்  (20), மகள் சாவி (10) ஆகியோர் அக். 16- ஆம் தேதி உயிரிழந்தனர்.  காயம் அடைந்த தனுஜ் (14),  விஷ்ணு  காந்த் (40), சதீஷ் (40) ஆகியோர்  சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.

கத்தாரில் சூரிய ஒளி  மின்நிலையம் இயக்கம்

கத்தாரில் சீனத் தொழில் நிறுவனங்களால் கட்டப்பட்ட 800 மெகாவாட் திறன் கொண்ட அல்கர்சா சூரிய ஒளி மின்நிலையத்தின் துவக்க விழா கடந்த செவ்வாயன்று  நடைபெற்றது. இதில் கத்தாரின் எமிர், தலைமை அமைச்சர், எரியாற்றல் விவகார அமைச்சர் முதலியோர் பங்கெடுத்தனர்.  சூரிய ஒளி மின்நிலையம், கத்தாரின் முதலாவது புதைபடிவமற்ற எரி பொருள் மின்நிலையம். மத்திய கிழக்கு பிரதேசத்தில் மிகப் பெரிய சூரிய ஒளி மின்நிலையங்களில் ஒன்றாக உள்ளது. இந்த மின் உற்பத்தி துவக்கம், கத்தாரின் புதிய எரியாற்றல் தொழிலின் வளர்ச்சிக்கு மைல் கல் முக்கியத்து வம் வாய்ந்தது. 2020ஆம் ஆண்டு ஜுலையில் துவங்கிய இத்திட்டப்பணியில் மொத்தம் 41.7 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டது. தலைநகர் தோஹா வுக்கு மேற்கே 80 கிலோமீட்டரில் பாலைவனத்தில் அமைந்துள்ள இத்தளத் தில் 20 இலட்சத்துக்கும் அதிகமான சூரிய ஒளி மின் தகடுகள் பொருத்தப் பட்டுள்ளன. சீனத் தொழில் நிறுவனங்கள், தொழில் நுட்பப் புத்தாக்கம் மூலம், உற்பத்தியை உயர்த்தியுள்ளதால், மின் உற்பத்தித் திறன் 20 விழுக்காடு அதிகரித்துள்ளன.  

மனித உரிமை விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை வேடம்

ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதிக் குழுவின் தற்காலிக தலைவர் டாய்பிங் வியாழனன்று பேசுகையில், அமெரிக்கா வளரும் நாடுக ளின் மீது பழி சுமத்தி வருகிறது. ஆனால், உள்நாட்டிலும், தனது கூட்டணி நாடுகளிலும் மோசமாகி வருகின்ற மனித உரிமை நிலைமையைக் கண்டும் காணாமலும் உள்ளது. இரட்டை வரையறை வெளிக்காட்டும் இச்செயல் மிகவும் போலித்தனமானது என்றார். மேலும், சீனாவின் மனித உரிமையில் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் அக்கறை காட்டவில்லை. மனித உரிமையைப் பயன்படுத்தி, சீனாவின் உள் விவகாரத்தில் தலையிட்டு, சீனாவின் சூழ்நிலையைக் குழப்பமாக்கி, சொந்த மேலாதிக்கவாதத்தைப் பேணிக்காப்பது தான், இந்நாடுகளின் நோக்கமாகும் என்பதை உண்மைகள் நிரூபித்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

மீனவருக்கு  ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் உத்தரவு

சென்னை, அக்.21- இந்தியக் கடற்படையினரால் சுடப்பட்ட மீனவர் வீரவேலுக்கு சிகிச்சை அளிக்கவும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கவும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- மயிலாடுதுறை மாவட்டம், வானகிரி கிராமத்தைச் சேர்ந்த காசி ராஜன் மகன் மீனவர் வீரவேல், வெள்ளி யன்று(அக்.21) இந்திய கடற்படை யினரால் சுடப்பட்டதில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்து, மிகுந்த அதிர்ச்சியும், வேதனை யும் அடைந்தேன். இந்த சம்பவத்தில் காயமடைந்த வீரவேல், சிகிச்சைக்காக உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் மீனவர் வீரவே லுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதோடு, அவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியி லிருந்து ரூபாய் இரண்டு லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு தெரிவித்துள்ளது.

பள்ளி பேருந்துகளில் கேமரா கட்டாயம்: அரசு உத்தரவு

சென்னை,அக்.21- பள்ளி பேருந்துகளில் முன்புறமும், பின்புறமும் கேமராவும், பின்பகுதியில் சென்சார் கருவியும் கட்டாயம் பொருத்த  வேண்டும் என தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.  பள்ளி வாகனங்களில் சிக்கி மாண வர்கள் விபத்துக்குள்ளாவதைத் தடுக்கும் வகையில், அனைத்து பள்ளி பேருந்துகளிலும் கேமரா, சென்சார் பொருத்துவதை கட்டாயமாக்க தமிழக அரசு முடிவுசெய்தது. அதன் தொடர்ச்சியாக மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தத்தை மேற் கொள்வதற்கான வரைவு, கடந்த ஜூன் 29 ஆம் தேதி உள்துறைச் செயலரால் அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த வரைவு மீதான கருத்துக்கேட்பு ஜூலை 29 ஆம் தேதி முடிவடைந்தது. இது தொடர்பான உத்தரவை வெளியிட அரசின் ஒப்புதலும் பெறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த உத்தரவு  தற்போது அரசிதழில் வெளியிடப் பட்டுள்ளது.

28 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, அக்.21- அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி யில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே பகுதியில் நிலவி  வருகிறது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் சனிக்கிழமையன்று (அக். 22) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அக். 23 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக, சனிக்கிழமை (அக்.22) குமரி, தென்காசி, நீலகிரி, கோவை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருச்சி,புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய 29 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

கடற்படைக்கு அமைச்சர் கண்டனம்

சென்னை,அக்.21- கோடியக்கரை - ராமேஸ் வரம் இடையே வடக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.  இது  வருத்தத்திற்குரியதாகும். எனவே, முதலமைச்சர் மூலம் கண்டனம் தெரிவிக் கப்படும். நடந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை செய்யப்படும். விசாரணை ஆணையம் அமைப்பது பற்றி முதல்வர் முடிவெடுப்பார் என்று மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் போரிஸ் ஜான்சன்?

லண்டன், அக்.21- வெறும் 45 நாட்கள் மட்டுமே பிரதமர் பொறுப்பில் இருந்த லிஸ் டிரஸ்சுக்குப் பிறகு யார் பிரதமர் என்ற போட்டியில் போரிஸ் ஜான்சனும் நுழைய முயற்சித்துக் கொண்டி ருக்கிறார். பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற் கான நடவடிக்கைகளை எடுக்க முடியாத நிலையில், லிஸ் டிரஸ் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பிரிட்டன்  வரலாற்றில் இவ்வளவு குறைவான நாட்கள் பிரதமர் பதவியில் இருந்தவர்கள் வேறு  யாரும் இல்லை. அவருடைய இடத்தில்  யாரை அமர வைப்பது என்ற ஆலோசனை யில் பிரிட்டனின் ஆளும்கட்சிஈடுபட்டுள்ளது.  அடுத்த வாரத்திற்குள் புதிய பிரதமரைத் தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அக்.26 ஆம் தேதிக்குள் வேட்புமனுவைத் தாக்கல்  செய்ய வேண்டும். வாக்குச் சீட்டில் இடம் பெறுவதற்கு 100 நாடாளுமன்ற உறுப்பினர் களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆளும்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 357 உறுப்பினர்கள் உள்ளனர். அடுத்த பிரதமருக்கான போட்டியில், ரிஷி சுனாக் முன்னணியில் இருக்கிறார். லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டபோது, இறுதிச்  சுற்று வரையில் ரிஷி சுனாக்தான் முத லிடத்தில் இருந்தார். தற்போது மீண்டும் முத லிடத்தில் உள்ளார். மேலும், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் போட்டி யில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன. வெளிநாட்டில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருக்கும் அவர், அவசர,  அவசரமாக நாடு திரும்பிக்கொண்டிருக்கிறார். மேலும் பென் வாலஸ், பென்னி மோர்டான்ட், கெமி படேனோச், ஜெரிமி ஹன்ட் மற்றும் சுவெல்லா பிரேசர்மேன் ஆகியோரும் களத்தில் இருக்கிறார்கள்.


 

;