states

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து மாணவர்களிடம் பிரச்சாரம் செய்க!

சென்னை, செப்.11- ஒன்றிய அரசின் தேசிய கல்வி  கொள்கையின் பாதகமாக அம்சங் களை  ஆசிரியர்கள் மாணவர்களிடம்  எடுத்துக் கூறவேண்டும் என்று உயர்  கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கேட்டுக்கொண்டார். சென்னையில் ஜாக்டோ ஜியோ மாநாட்டில் அவர் பேசியதாவது: “இந்த மாநாட்டிலே பங்கேற்பதில் மிகுந்த பெருமை, எனென்றால் உங் களில் ஒருவனாக இருந்தவன் நான். 1985ஆம் ஆண்டு அனைத்து அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும், அரசு பணியாளர்களையும் ஒருங்கி ணைத்து உருவாக்கப்பட்ட ஜாக்டோ ஜியோவில் இணைந்து நானும் செயல் பட்டிருக்கிறேன். எனது குடும்பமே ஆசிரியர் குடும்பம். எனது அப்பா, அம்மாவும், தாத்தா என அனைவரும் ஆசிரியர்கள். உங்களது அனைத்து கோரிக்கைகளும் நியாயமானது. ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை (என்இபி) எதிர்க்கி றோம் என இம் மாநாட்டில் முதல் தீர்மா னம் நிறைவேற்றியதற்கு எனது மனமா ர்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கி றேன். கியூட் என்ற ஒன்றைக்கொண்டு வந்து பிஏ, பிஎஸ்சி படிப்பதற்கும் நுழை வுத் தேர்வு என ஒன்றிய அரசு கூறு கிறது. அதேபோல் 3, 5, 8ஆம் வகுப்பு களுக்கு பொதுத் தேர்வை கொண்டுவர ஒன்றிய அரசு முயற்சிக்கிறது.

அப்படி கொண்டு வரப்பட்டால் கிராமப்புற மாணவர்கள் தொடர்ந்து படிக்க முடி யாத நிலை ஏற்படும். எனவே இந்த கல்விக்கொள்கையை  நீங்கள் மட்டும் எதிர்த்தால் போதாது, அதன் பாதிப்பு களை பொதுமக்களிடையே அரசு ஊழி யர்களும், மாணவர்களிடையே ஆசிரி யர்களும் எடுத்துக் கூற வேண்டும். அது தான் இந்த மாநாட்டின் வெற்றியாகும். அரசு என்னதான் திட்டங்களை தீட்டி னாலும் அதை நிறைவேற்றிக் கொடு க்கும் பொறுப்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உங்களிடம்தான் இருக் கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. 2 விழுக்காடு இருக்கும் அரசு ஊழியர்களுக்கு 95 விழுக்காடு நிதியை செலவிட வேண்டுமா என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா  கிண்டல் செய்தார். அதுபோல் அல்லா மல் தற்போதைய முதலமைச்சர் உங் கள் கோரிக்கைகளை நிறைவேற்று வார். நீங்கள் அனைவரும் ஒற்றுமை யுடன் இணைந்து செயல்படவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகி யோரும் கலந்து கொண்டு பேசினர். மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் நன்றி கூறினார்.