states

ரேசன் கடை பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க உத்தரவு

சென்னை, செப். 10-  ரேசன் கடை பெண் ஊழியர்களுக்கு 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத்துறை பதிவாளர்  அனுப்பிய சுற்றறிக்கையில், “அரசுப் பணி யாளர்களுக்கு அரசாங்கம் அவ்வப்போது அறிவிக்கப்படும் மகப்பேறு விடுப்பு குறித்த  சலுகைகள் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் மகளிர் பணியாளர்களுக்கும் பொருந்தும். ஆகவே நியாயவிலைக் கடை களில் பணிபுரியும் பெண் பணியாளர்க ளுக்கும் 12 மாதங்கள் (365 நாட்கள்) மகப்பேறு விடுப்பு பொருந்தும். கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு அரசால் அறிவிக்கப்பட்ட 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு அனுமதிக்கப்படுவதில்லை என்றும் 6 மாதங்கள் மட்டுமே மகப்பேறு விடுப்பு அனுமதிக்கப்படுகிறது என்றும் 6 மாதங்களுக்கு மேலாக மகப்பேறு விடுப்பு எடுத்த பணியாளர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதாகவும் புகார்கள் வருகின்றன.  இந்த நிலை மிகவும் வருத்தத்திற்குரியது.  தங்கள் மண்டலத்தில் செயல்படும் அனைத்து கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப் பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் பெண் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு பார்வை (3) இல் காணும் அரசாணையின்படி 12 மாதங்கள் (365 நாட்கள்) மகப்பேறு விடுப்பு அனுமதிக்கத் தேவையான துணைவிதி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, தகுதி யுள்ள அனைத்து பெண் பணியாளர்க ளுக்கும் மகப்பேறு விடுப்பு அனுமதிக்கப் படுவதை  உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு அச்சலுகைகள் கிடைக்க உடனுக்குடன் நட வடிக்கை எடுக்கவும், அவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல் இதுபோன்ற புகார்கள் பெறப்படுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது” என அதில்  குறிப்பிட்டுள்ளார்.

;