states

மின் கட்டண உயர்வை ரத்து செய்க!

சென்னை, ஜூலை 5- மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என திருமணமண்டப உரிமையாளர்கள் சங்கம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அனைத்து கல்யாண மண்டப உரிமையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.ஜான் அமல்ராஜ், பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.சந்திரன், பொருளாளர் என்.பி.ஆர்.மனோகர் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் சுமார்  7,000 திருமண மண்டபங் கள் உள்ளன. தொடர்ச்சி யாக சொத்து வரி, மின்  கட்டணம், வணிக உரிம  கட்டணம் என்று அனைத்து  வகையிலும் கட்டணங்களை 100 விழுக்காடு முதல் 200 விழுக்காடு வரை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது. ஒரே ஆண்டில் இருமுறை உயர்த்துவதை ஏற்க முடியாது. கொரோனா கால கட்டத் திலிருந்து இன்றளவும் மீள முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் இதுபோன்ற வரி விதிப்புகள் மண்டபங் களை பராமரிக்க முடியா மல், வங்கி கடனை செலுத்த  முடியாமல் அவதிப்படு கிறோம். சிலர் மண்டபங் களை மூடும் நிலைக்கு வந்து விட்டார்கள். இதுபோன்ற வரி உயர்வுகள் அனைத்தும் திருமண நிகழ்ச்சிகள் நடத்தும் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும். மேலும் மண்டபங்கள் மூடப்பட்டால், திருமண நிகழ்ச்சிகளில் புகைப்படம் எடுப்பவர்கள், கேட்டரிங், நாதஸ்வரம், அலங்காரம், புரோகிதர்கள் என நேரடி யாகவும் மறைமுகமாகவும் பல லட்சம் அமைப்பு சாரா  தொழிலாளர்கள் பாதிக்கப் படுவார்கள். வேலை யின்மை அதிகரிக்கும். எனவே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், திருமண மண்டபங்களை சேவைத் துறையின் கீழ் கொண்டு வரவேண்டும். கட்டணம் (டேரிப்) 3 பி-க்கு மாற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு அனைத்து வரி உயர்வு களிலிருந்து திருமண மண்டபங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.