states

அனைவரின் நிதிப் பங்களிப்பில் அரசாங்கம் நடக்கவில்லையாம்

புதுதில்லி, செப்.7- அரசாங்கம் அனைவரது நிதிப்பங்களிப்பில் நடப்பதாக கூற முடியாது; வரி செலுத்தும் 4 சதவிகிதம் பேர்களால்தான் அரசாங்கமே இயங்குகிறது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிலையங்களில், இஸ்  லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து, கர்நாடக மாநில பாஜக அரசு கடந்த 2022 பிப்ரவரியில் உத்தர விட்டது. கர்நாடக உயர் நீதிமன்ற மும் இந்த உத்தரவை, கடந்த மார்ச் 15 அன்று  உறுதி செய்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களின் உரி மைக்காக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இங்கு நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா அமர்வு வழக்கை விசா ரித்து வருகிறது. இதனிடையே, கடந்த திங்க ளன்று நடைபெற்ற விசாரணை யின்போது, மனுதாரர்கள் தரப்  பில் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே ஆஜராகி வாதாடி னார். அப்போது, “வயது வந்த  பெண்களிடம், அவர்கள் எந்த  உடையை அணியலாம், எதை  அணியக்கூடாது என்று கூறுவது  சரியாக இருக்காது” என்று குறிப்பிட்டார். அப்போது, குறுக்கிட்ட நீதி பதி ஹேமந்த் குப்தா, ஒவ்வொரு இடத்திற்கு ஒவ்வொரு வித மான உடைக் கட்டுப்பாடு அவசி யமானது என்றதுடன், நீதி மன்றத்தில் வாதிடும்போது வழக் கறிஞர்கள் ஜீன்ஸ் அணிய தடை விதிக்கப்பட்டது,

கோல்ப் மைதா னத்திற்கும், சில உணவகங்க ளுக்கும் கூட உடைக் கட்டுப்பாடு உள்ளது என்று கூறினார். அப்போது “எல்லா விதி களுமே சூழலுக்கு ஏற்ப மாறக்  கூடியதுதான்” என்று தெரிவித்த வழக்கறிஞர் ஹெக்டே “இன்று மாணவியர் அரசுக் கல்லூரியில் கல்வி கற்கும் சூழல் உள்ளது.  அந்த அரசாங்கமும் (சிறுபான்மை இஸ்லாமியர் உட்பட) அனை வரது நிதியளிப்பாலும்தான் நடத்தப்படுகிறது” என்றார். அப்போது உடனடியாக குறுக்கிட்ட நீதிபதி ஹேமந்த்  குப்தா, ‘மன்னிக்க வேண்டும்...  நம் நாட்டில் வெறும் 4 சதவிகிதம் பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள். எனவே அரசு என்பது அனைவரின் நிதி பங்களிப்பில் நடத்தப்படுகிறது என்று சொல்ல முடியாது” என  மீண்டும் எதிர்க் கருத்து தெரி வித்தார். அதற்கு “ஆமாம்.. 4 சதவிகி தம் பேர் நேரடி வரி செலுத்து கிறார்கள்... ஆனால், ஏனைய மக்கள் அனைவரும் மறைமுக வரி செலுத்துகிறார்கள்;

இங்கே பிரச்சனை அதுவல்ல!” என்று  வழக்கறிஞர் ஹெக்டே உடனடி யாக பதிலளித்தாலும், “அனை வரின் நிதி பங்களிப்பில் அர சாங்கம் நடத்தப்படுவதாக சொல்ல முடியாது” என்று நீதிபதி  ஹேமந்த் குப்தா கூறிய கருத்து  சர்ச்சையாகி உள்ளது. நீதிபதி ஹேமந்த் குப்தாவின் கருத்து சரியானதல்ல; புரிதல் குறைபாடு கொண்டதாக அவ ரது கருத்து உள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். “நாட்டில் அனைத்து குடி மக்களும் அவரவர் நிலைக் கேற்ப வரி செலுத்திக் கொண்டு தான் இருக்கின்றனர். 5 ரூபாய்க்கு பிஸ்கட் வாங்கும் ஒரு கூலித் தொழிலாளி கூட 90 காசுகளை வரியாக செலுத்துகிறார். இதனை நீதிபதி குப்தா ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என தெரியவில்லை. இந்திய மக்கள் அனைவரும் ஜிஎஸ்டி, தொழில் வரி, சுங்க வரி, சொத்து வரி, சாலை வரி, முத்திரை வரி,  செஸ் என பல்வேறு விதமான வரி களை ஒன்றிய - மாநில அரசு களுக்கு செலுத்திக் கொண்டு தான் உள்ளனர். இவற்றைப் பற்றியெல்லாம் நீதிபதி அறிந்தி ருக்க வேண்டும்” என்று பலர்  காட்டமாகவும் கருத்துக்களை யும் பதிவிட்டுள்ளனர்.