states

img

பீகாரில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

பீகார் மாநி லத்தின் அராரியா மாவட்டத்திற்கு ட்பட்ட ராணிகஞ்ச் பிளாக் பகுதியில் வசித்து வருபவர் விமல் குமார் யாதவ். இவர் தைனிக் ஜாக்ரன் ஊடகத்தில் செய்தியாளராக பணியாற்றி வரும் நிலையில், வெள்ளியன்று அதிகாலை  5.30  மணியளவில் 4 பேர் கொண்ட கும்பல் விமல் குமாரின் வீட்டின் கதவை தட்டி யது. கதவைத் திறந்தவுடன் அந்த  கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில்  விமல் குமார் படுகாயம் அடைந்தார். உட னடியாக ராணிகஞ்ச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், விமல் குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தனது இளைய சகோதரர் கொலைக்கு விமல் குமார் சாட்சியாக இருப்பதாகவும், சாட்சியத்தை அழிக்கவே விமல் குமார் கொல்லப்பட்டதாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.