states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அரிசி கொம்பன் யானை உயிருடன் உள்ளதா; எங்கு, எப்படி உள்ளது என்பதை தெரிவிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்த ரவிடக் கோரி கேரளாவை சேர்ந்த வாக்கிங் ஐ பவுண்டேஷன் என்ற விலங்குகள் உரிமைகள் அமைப்பு பொதுநல வழக்கை தொடர்ந்தது. இது அவசியமற்ற வழக்கு என்று கடும் அதிருப்தி  அடைந்த உச்சநீதி மன்றம் மனுதாரருக்கு ரூ.25,000 அபராதம் விதித்தது.

விளைச்சல் குறைவு கார ணமாக தக்காளி விலை ஜெட் வேகத்தில் எகிறி வரும் நிலையில், வியா ழனன்று  தக்காளி கிலோ வுக்கு ரூ.162 ஆக விற் பனை செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் சட்டவிரோத மாக வீடுகளில் வளர்க் கப்பட்ட 10-க்கும் மேற் பட்ட கிளிகளை பறிமுதல் செய்தது வனத்துறை. மேலும் வீடுகளில் கிளி  வளர்ப்பவர்கள் வரும் ஜூலை 17 அன்றுக்குள் ஒப்படைக்க வேண்டும் என வனத்துறை எச்ச ரிக்கை விடுத்துள்ளது.

டுவிட்டருக்கு போட்டி யாக களமிறங்கிய மெட் டாவின் “திரெட்ஸ்” சமூக வலைத்தளம் வெளி யான 7 மணி நேரத்தி லேயே 10 லட்சம் பயனர் களை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் ஏஐ சாட் ஜிபிடி 5 நாட்களில் 10  லட்சம் பயனர்களை ஈட்டி யதே முந்தைய சாதனை யாக இருந்தது.

ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் கிற்கு எதிரான அவதூறு வழக்கில் ஆக.7 அன்று நேரில் ஆஜராக ராஜஸ் தான் முதல்வருக்கு தில்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

;