states

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் காட்டுப்பள்ளியில் நிலைநிறுத்தம்

சென்னை, செப்.4- விசாகப்பட்டினத்தில் போதிய உள்கட்டமைப்பு வசதி கள் இல்லாததால் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் சென் னைக்கு அருகில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தில் 8 ஆண்டுகள் வரை நிலைநிறுத்தப்படலாம் எனத் தகவல்  வெளியாகியுள்ளது.  ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலானது ரூ.23,000 கோடி செலவில் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில்  கட்டப்பட்டது. இதன் மூலமாக விமானம் தாங்கிக் கப்பலை  சொந்தமாகக் கட்டும் திறன் கொண்ட வெகுசில நாடுகளு டன் இந்தியாவும் இணைந்தது.  இந்திய கடற்படை வரலாற்றிலேயே உள்நாட்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகும். இந்தக் கப்பலில் நூறுக்கும் மேற்பட்ட குறு, சிறு,  நடுத்தர தொழில் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட கருவி கள், இயந்திரங்கள் ஏராளமாக பொருத்தப்பட்டுள்ளன.  

1,700 வீரர்கள் பயணிக்கும்படியாக உருவாகியுள்ள இக்கப்பலிலிருந்து மிக் - 29கே போர் விமானங்கள், கமோவ் - 31 ஹெலிகாப்டர்கள், எம்ஹெச் - 60ஆர் ஹெலி காப்டர்கள் ஆகியவற்றை இயக்கவும் தரையிறக்கவும் முடியும்.  அதிகபட்சமாக சுமார் 28 நாட் வேகத்தில் கப்பலை இயக்க முடியும். கடந்த வெள்ளியன்று இக்கப்பலை பிரத மர் மோடி, இந்தியக் கடற்படையில் இணைத்து வைத்தார்.  இந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் சென்னைக்கு அருகில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தில் 8 ஆண்டுகள் வரை நிலை நிறுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.  கப்பலை நிறுத்துவதற்காக இந்திய கடற்படை கடந்த  சில ஆண்டுகளாக காட்டுப்பள்ளியில் உள்ள எல்&டி கப்பல் கட்டும் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. விசாகப்பட்டினத்தில் புதிய தளம் பயன்பாட்டுக்கு தயாராகும் வரை போர்க்  கப்பல் காட்டுப்பள்ளியில் தற்காலிகமாக நிலைநிறுத்தப் படும் எனத் தெரிகிறது.

;