states

img

அனைத்து துறைகளிலும் முதன்மையான மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம்

சென்னை, செப்.4- அனைத்து துறைகளிலும் தமிழ கத்தை முதன்மையான மாநிலமாக மாற்றுவோம் என்று மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். சென்னையில் ஞாயிறன்று நடை பெற்ற ஷேட் 69 ஸ்டூடியோ 3வது ஆண்டு விழாவில் பேசிய அவர் தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ கம் முன்னணி மாநிலமாக உள்ளது என்றார். திறன்மிக்க இளை ஞர்கள் நமதுமாநிலத்தில் உள்ள தால் இந்ததுறை தொடர்நது வளர்ச்சி யடைந்து வருவதாகவும் அவர் கூறினார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே மாநில அரசின் இலக்கு என்றும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகில் அந்த துறையின் வளர்ச்சிக்கு தேவை யான உதவிகளை மாநில அரசு செய்து தரும் என்றும் உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய  ஷேட் ஸ்டூடியோ  தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கடந்த 3 ஆண்டுகளில் போஸ்ட் புரொடக்ஷன் சேவையில் முன்ன ணியில் இருந்ததாகவும் தற்போது விஷூவல் எஃபெக்ட்ஸ் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகிய இரண்டு டொமைன்களில்  இறங்குவ தாக கூறினார். திரைப்படம் தொலைக் காட்சி தொடர், விளம்பரம், குறும்படங் கள் ஆவணப்படங்கள் ஆகியவற்றை ஒளிப்பதிவு செய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளவேண்டிய  பணிகளை செய்ய தேவையான அனைத்து தொழில்நுட்பங்களும் இங்கு உள்ள தாக கூறினார். இந்த நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்,இயக்குநர் கவுரவ் நாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

;