states

சிங்கப்பூருக்கு அதிகம் செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகள்

சிங்கப்பூர், ஜூலை 25- சிங்கப்பூருக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் இந் தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டின் 6 மாதங்களில் 2 லட்  சத்து 19 ஆயிரம் இந்தியர்கள் சிங்கப்பூர்  வந்துள்ளதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தோனேஷியா முதலிடத்தையும், மலேசியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த நாடுகளி லிருந்து 56 சதவீதத்திற்கும் அதிகமான  பார்வையாளர்கள் சிங்கப்பூருக்கு சென்றி ருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.