சென்னை, ஜூலை 20- தமிழ்நாட்டிற்கு கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டின் 6 மாத காலத்தில் சுற்றுலா பயணி களின் எண்ணிக்கை கணிசமாக அதி கரித்துள்ளது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரி வித்துள்ளார். சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் புதனன்று (ஜூலை 19) சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்று லாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்தி ரன் தலைமையில் நடைபெற்றது. சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:- நாட்டிலேயே தமிழ்நாடு அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி களை ஈர்க்கும் முதன்மை சுற்றுலாத் தலமாக முன்னேறியுள்ளது. கொரோ னாவிற்கு பிறகு 2021 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணிகளின் வருகை 57,622 ஆக இருந்த நிலையில் கடந்த ஆண்டில் 4,07,139 ஆக உயர்ந்தது. இந்த ஆண்டில் 6 மாத காலத்தில் மட்டுமே 5,27,072 ஆக உயர்ந்துள்ளது.உள்நாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் 6 மாத காலத்தில் 14,48,16,003 என உயர்ந்துள்ளது.
விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
சுற்றுலாவை மேம்படுத்த சுற்றுலா வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் நபர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை 2022 ஆம் ஆண்டு முதல் உலக சுற்றுலா தின நிகழ்ச்சியில் சுற்றுலா விருதுகளை அறிமுகப்படுத்தி வழங்கி வருகிறது. அதன்படி சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த விமான பங்கு தாரர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவ கம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சிறந்த உணவகம், தங்கு மிடம் மற்றும் படகு இல்லம். சுற்று லாவை ஊக்குவிப்பதற்கான சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலாத்தலம், பல்வேறு சுற்றுலா பிரிவுகள் சிறந்த ஏற்பாட்டாளர், சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளர், சமூக ஊடகங்களில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி யவர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, தமிழ்நாட்டிற்கு சிறந்த சுற்றுலா விளம்பரம், சுற்றுலாவை பிரபலப் படுத்தும் வகையில் சிறப்பாக விளம் பரப்படுத்துதல், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சிறந்த கல்வி நிறுவ னம் என 17 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து 15.8.2023-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுலா செயல்பாட்டாளர்கள் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.