states

வளர்ச்சியே நமது லட்சியம்

அடுத்த 25 ஆண்டுகளுக்குள் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இணையாக கேரள மக்களின் வாழ்க்கை த்தரத்தை உயர்த்துவது என்ற லட்சியத்துடன் கேரள அரசு முன்னோக்கிச் செல்வதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். மிகவும் வறுமைநிலையில் உள்ள வர்களின் கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. அத்தகையக் குடும்பங்களை நிச்சயிக்கப்பட்ட திட்டங்களின்படி பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். நான்கு ஆண்டுகளுக்கு இத்தனை பேர் என்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அனைவரும் மனநிறைவுடன் ஓணம் கொண்டாடுவதற்கான வாய்ப்பை அரசு ஏற்படுத்தும். நாட்டில் விலைவாசி உயர்வு மிகக்குறைந்த அளவில் அனுபவப்படும் மாநிலமாக கேரளம் உள்ளது. திருவிழாக்காலங்களில் அன்றாட உபயோகப் பொருட்கள் பொது விற்பனை விலையைவிடக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வத ற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிவில் சப்ளைக் கார்ப்பரேசன் தலைமையில் அமைக்கப்படும் விற்பனை அரங்குகள், கன்ஸ்யூமர் ஃபெட் நிர்வாகத்தின் 1600 அரங்குகள் ஆகியவற்றின் மூலம் குறைந்த விலையில் அன்றாட உபயோகப் பொருட்கள் மக்களுக்குக் கிடைக்கும் வகையில்  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

;