ஆவடி மாநகராட்சியில் மக்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரண்டு வார காலம் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. அதன் நிறைவாக ஞாயிறன்று (ஜூலை 2) மாலை ஆவடி மாநகராட்சித் திடலில் நடைபெற்ற கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார். தொகுதி செயலாளர் அ.ஜான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ராபர்ட் ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், ம.பூபாலன், தொகுதிக் குழு உறுப்பினர் எஸ்.லதா, மணி (போக்குவரத்து) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். தொகுதிக்குழு உறுப்பினர் ஏ.நடராஜன் நன்றி கூறினார்.