states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. கர்நாடக மாநிலம் கோப் பல் மாவட்டத்திற்கு உட் பட்ட ஹூல்லரஹல்லி பகுதியில் புதிதாக கட்டப் பட்ட கோவிலின் சாமி சிலையை தொட்ட தலித்  சிறுவனின் குடும்பத்தி ற்கு ரூ.60 ஆயிரம் அப ராதம் விதித்துள்ளது ஊர்  பஞ்சாயத்து. மேலும் அபராதம் செலுத்தும் வரை ஊருக்குள் வர வும் தலித் குடும்பத்திற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது.
  2. கட்டட பணிகளை செய்ய விடாமல் தடுப்பதாக ஓபி எஸ் சகோதரர் சண்முக சுந்தரம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரிய குளம் தென்கரை காவல் நிலையத்தில் மருத்துவர் திருமலை புகார் அளித்து ள்ள நிலையில், சண்முக சுந்தரம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  3. ஹரியானா மாநிலத்தின் ஷஹரான்பூர் - பஞ்சு க்லா தேசிய நெடுஞ்சா லையில் அமைந்துள்ள பாலத்தில் இருந்து சுமார் 4000 நட்டு, போல்டுகள் திருடப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய நெடுஞ் சாலை ஆணையம் எந்த புகாரும் அளிக்கவில்லை என தகவல் வெளியாகி யுள்ளது.
  4. சென்னை நெளம்பூர் சார் பதிவாளர் அலுவலகத் தில் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி அதிரடி திடீர் ஆய்வு மேற் கொண்டார். ஆய்வின் பொழுது 50க்கும் மேற்பட் டோர் காத்திருந்தது தொ டர்பாகவும், மெத்தனமாக பணி செய்த பணியாளர் களுக்கு எச்சரிக்கை விடுத்து, சார்பதிவாள ரை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டார்.
  5. பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் வடமேற்குப் பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றன. அரிசி, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அந்த நிறுவனங்கள் அனுப்பி வைத்துள்ளன. கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் இந்த உதவிகள் செய்யப்படுகின்றன.
  6. இராக்கின் சுயாட்சி பெற்ற பகுதியான குர்தீஸ்தானில் துர்க்கியே போர் விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளன. குர்தீஸ்தான் தொழிலாளர் கட்சியின் செல்வாக்கு உள்ள இடங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. உயிரிழப்பு பற்றிய விபரங்கள் இதுவரையில் கிடைக்கவில்லை. ஆனால் பல்வேறு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன. இந்தத் தாக்குதல்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  7. ஜப்பானின் வானிலை அலுவலகம் சிறப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வழக்கத்திற்கு மாறான இந்த எச்சரிக்கை, ஜப்பானின் தென் மேற்குப்பகுதியைத் தாக்கவிருக்கும் நன்மடோல் என்ற புயலின் தாக்கத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்கவே விடுக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 30 லட்சம் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரவிட்டிருக்கிறார்கள். பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இந்தப் புயல் இருக்கும் என்று வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
;