states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உக்ரைனுக்கான அமெரிக்க உதவி மசோதாவுக்கு தடை

வாஷிங்டன், மே 14- உக்ரைனுக்கான முன்பு கண்டி ராத மதிப்புடைய உதவி மசோதா வை அமெரிக்க நாடாளுமன்றத் தின் செனெட் அவை ஏற்றுக்கொள்  வதை, குடியரசு கட்சியின் செனெட் அவை உறுப்பினர் ராண்ட் போல் தடை செய்துள்ளார். அவர் கூறுகையில், பண வீக்கத்  தால் அமெரிக்கர்கள் பெரிதும் பாதிக்  கப்பட்டு வருகின்றனர். இந்நிலை யில் மேலதிக பணம் செலவிட்டு மக்களின் வேதனையைத் தீவிர மாக்க நாடாளுமன்றம் முயன்று வருகிறது என்று குற்றம் சாட்டி னார். கடந்த ஏப்ரல் 28ஆம் நாள் உக்  ரைனுக்குப் பாதுகாப்பு, பொருளா தாரம் மற்றும் மனித நேய உதவியை வழங்கும் வகையில், 3300 கோடி  டாலர் அவசரக் கூடுதல் நிதிக்கு  அனுமதி கொடுக்க வேண்டும்  என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாடாளுமன்றத்துக்கு எழு திய கடிதத்தில் கோரியிருந்தார். அதனைத் தொடர்ந்து ராணுவம் மற்றும் மனித நேய உதவிக்காக, மேலும் 680 கோடி டாலர் அதிகரிக்  கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இம்மசோதா ஏற்கனவே அமெரிக்க பிரதிநிதிகள் அவையால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

திரிபுரா முதல்வர் பிப்லப் குமார்  திடீர் ராஜினாமா!

திரிபுரா மாநில பாஜக முதல்வர் பிப்லப் குமார் தேவ், தனது முதல்வர் பதவியை ராஜி னாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை அவர் சனிக்கிழமையன்று ஆளுநரிடம் அளித்துள்ளார். பிப்லப் குமார் மீது பாஜக எம்எல்ஏ-க்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், இரண்டு நாட்க ளுக்கு முன்பு, அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்தப் பின்னணி யிலேயே பிப்லப் குமார் தற்போது ராஜினாமா செய்துள்ளார். புதிய முதல்வராக மாணிக் சஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோதுமை விலை உயர்வுக்கு ஒன்றிய அரசே காரணம்!

“ஒன்றிய அரசு போதுமான அளவு கோதுமையை கொள்முதல் செய்ய தவறியதே, தற்போதைய கோதுமை விலை உயர்வுக்கு இதற்கு காரணம் என்று நினைக்கிறேன். சரி யான அளவில் கொள்முதல் நடந்திருந்தால், கோதுமை ஏற்றுமதியை தடை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. கோதுமை ஏற்றுமதியை தடை செய்வது விவ சாயிகளுக்கு எதிரான நடவடிக்கை. அதிக ஏற்று மதி விலையின் பயன்கள் விவசாயிகளுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. இந்த நட வடிக்கையால் நான் ஆச்சரியம் அடைய வில்லை. ஏனெனில் இந்த அரசு விவசாயிகளி டம் ஒருபோதும் நட்புடன் இருந்ததில்லை” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

பிரகாஷ் ராஜ் உள்பட 61 பேருக்கு கொலை மிரட்டல்

கன்னட எழுத்தாளர் வீரபத்ரப்பாவுக்கு 2-ஆவது முறையாக மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், வீர பத்ரப்பா மட்டுமன்றி, முன்னாள் முதல்வர்க ளான சித்தராமையா, எச்.டி. குமாரசாமி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், மடாதிபதி நிஜகுன்னானந்தா சுவாமி, நிடுமாமிடி வீரபத்ர சென்னமல்லா சுவாமி,  எழுத்தாளர் பரகூர் ராமசந்திரப்பா, நடிகர் பிர காஷ் ராஜ் உட்பட 61 பேரை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள் ளது. “நீங்கள் அனைவரும் இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்துக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் இறந்து போவதற்கு தயாராக இருங்கள். நாங்கள் வெறும் காகித புலிகள் அல்ல. சொல்வதை செய்தும் காட்டுவோம்’’ என்று மிரட்டல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் குவாசுலு-நேட்டால் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 13 லட்சம் டாலர்களை ஒதுக்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.  ஏற்கனவே கடுமையான சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வந்த இப்பகுதி மக்கள் கூடுதல் நெருக்கடியில் சிக்கியிருப்பதால் உதவி வழங்கப்படுவதாக தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஐ.நா. குழுத் தலைவர் அயடெலே ஒடூசோலா தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அரசுடன் இணைந்து இந்த உதவி வழங்கப்படவிருக்கிறது.

ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க பிரிட்டன் அரசு முடிவெடுத்திருக்கிறது. இத்தகவலை அந்நாட்டின் அமைச்சர்களில் ஒருவரான ஜேக்கப் ரீஸ் மோக் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார். 

கூடுதலாக இருக்கும் ஊழியர்களை வெளியேற்றுவதன் மூலம் ஏராளமான நிதியை சேமிக்க முடியும் என்றும், 2016 ஆம் ஆண்டில் இருந்த நிலைமைக்குத் திரும்ப உதவும் என்றும் அவர் கூறியிருக்கிறார். 91 ஆயிரம் பேருக்கு வேலை போகும் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முடக்கி வைக்கப்பட்டிருந்த ரஷ்யர்களின் கணக்குகளில் இருந்து 340 கோடி டாலர் மதிப்புள்ள நிதியை விடுவித்துவிட்டதாக ஸ்விட்சர்லாந்து அறிவித்துள்ளது. உக்ரைன் தாக்குதல் காரணமாக விதிக்கப்பட்ட தடைகளால் ரஷ்யர்களுக்குச் சொந்தமான பல கணக்குகளை ஸ்விட்சர்லாந்து முடக்கியிருந்தது. இந்தக் கணக்குகள் மீது தடை விதிக்க வேண்டும் என்பதற்குப் போதிய அளவில் சான்றுகள் இல்லை என்று ஸ்விட்சர்லாந்தின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு விளக்கம் அளித்திருக்கிறது.
 

;