states

குஜராத் நீதிமன்றங்களில் 8 மாதத்தில் 50 பேருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு!

அகமதாபாத், செப்.20- குஜராத்தில் 2022 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாதங்களில் 50 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி  நீதிமன்றங்கள் தீர்ப்பளித் துள்ளன. குஜராத் மாநில விசா ரணை நீதிமன்றங்களில் 2006 முதல் 2021 வரையிலான 15 ஆண்டுகளில் மொத்தமே 46 பேருக்கு மட்டுமே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், 2022-ஆம் ஆண்டின் 8 மாதங்களில் மட்டும் 50 பேருக்கு தூக்குத்  தண்டனை விதிக்கப்பட்டி ருப்பது அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. 2002 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்ப வத்தில், 56 பேர் உயிரிழந்த னர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ் வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு டைய குற்றவாளிகள் 38 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு அதிகபட்சமாக 13 பேருக்கு  தூக்குத் தண்டனை விதிக் கப்பட்டது.  இவர்களில் 11 பேர் 2002, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவ வழக்குடன் தொடர்புடையவர்கள் ஆவார்கள்.

;