states

விரைவில் குரூப் 5 ஏ தேர்வு முடிவுகள்

சென்னை,ஜுலை 3- குரூப் 5 ஏ பணித் தேர்வு முடிவுகள்  விரைவில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணி யிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி அரசுத் துறைகளில் அமைச்சுப் பணியில் இருப்பவர்கள் தலைமைச் செயலகப் பணிகளுக்கு செல்வதற்காக குரூப் 5 ஏ தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி தலை மைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் உட்பட பதவிகளில் உள்ள 161 காலிப் பணி யிடங்களை நிரப்புவதற்கான குரூப் 5 தேர்வு அறிவிப்பாணையை டிஎன்பி எஸ்சி கடந்த ஆகஸ்ட் 23 அன்று வெளி யிட்டது. தொடர்ந்து விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்ற செப்டம்பர் 21 ஆம் தேதி வரை கால  அவகாசம் வழங்கப்பட்டது. இதை யடுத்து குரூப் 5 ஏ தேர்வு எழுத 383  பெண்கள் உட்பட மொத்தம் 1,114 பேர்  விண்ணப்பித்தனர். அவர்களுக்கான எழுத்துத் தேர்வு சென்னையில் டிசம்பர் 18 ஆம் தேதி நடத்தப்பட்டது. காலையில் பொது தமிழ் தாள் தேர்வு, மதியம் பொது ஆங்கிலத் தாள் தேர்வு நடைபெற்றது. இந்நிலை யில் தேர்வு முடிந்து சுமார் 7 மாதங்க ளாகி விட்ட சூழலில், முடிவுகள் இன்னும் வெளியாகாமல் இருப்பது தேர்வர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி உயரதிகாரி கூறியதாவது:-  பல்வேறு விதமான தேர்வு பணிகளை ஒருசேர கையாள்வதால் பணிகளை திட்டமிட்ட காலத்துக்குள் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் குரூப் 5ஏ மட்டுமின்றி பெரும் பாலான தேர்வுகளின் முடிவுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்த  வகையில் குரூப் 5 ஏ தேர்வு விடைத் தாள் திருத்தும் பணிகள் முடிக்கப்பட்டு விட்டது. மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இறுதிகட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வு முடிவுகள் விரை வில் வெளியாகும். இவ்வாறு கூறியுள்ளார்.

;